...

14 views

அம்மாவும் நானும்
அதிகமாக பெண்கள் என்றாலே பயந்த சுபாவம் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது. சில விசயங்கள் பயமாகவும் சிலவற்றில் இலகுவாகவும் செய்து விட முடிகிறது. இது தனிநபர்களுக்கமைய வேறுபட கூடியது. அந்த வகையில் அம்மாக்கள் எல்லாம் பயத்தை இலகுவாக வெளிப்படுத்துவாங்க. அங்க போகாத, அதை செய்யாத, அவங்க அப்டி கதைப்பாங்க, தனிய எங்கயும் திரியாத இப்படி பலதும் நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.இது ஒரு இயல்பு தான். இவ்வளவு சொல்லியும் செவிமடுத்து கொள்ளுறவங்களும் இருக்கிறாங்க, அதை மறுக்கிறவையும் இருக்கினம்.
ஆனால் இதை புரிய வைக்கிற வடிவில இன்னும் கொஞ்ச பேர் இருக்காங்க.
அம்மாவோட நான் நிறைய தனியாய் பயணம் செய்வது வழக்கம், அதாவது அம்மாவோட சாரதி நான் தான். எனக்கும் அம்மாக்கும் நிறைய புரிதல்கள் உண்டு. இருந்தும் சில சமயம் சின்ன விசயத்துக்கும் என்னோட சண்டை போடுறது வழக்கம். அதெல்லாம் சும்மா ஒரு பத்து நிமிச கோபம்.
என்ன தான் இருந்தாலும் சில சின்ன முடிவுகளை கூட தானா எடுத்து கொள்ள தெரியாத ஒரு சிறு பிள்ளை போல இருப்பா. எல்லாத்தையும் ஒரு பத்து தரம் கேட்டு கொண்டிருப்பா. கூடுதலாக என்னிடம் கேட்டுக் கொள்ளுவா இப்படி செய்யலாமோ என்ன செய்யிற எண்டு நிறையவும் எங்களுக்குள்ள இது போன்ற தொடர்பாடல்கள் அதிகம். அம்மாவுடனான பயணங்கள் எல்லாம் புதிதான ஒவ்வொரு பேச்சுக்களை கொண்டவை. அம்மாக்கு நான் அடிக்கடி நிறைய சொல்றது. உங்கட இஷ்டத்துக்கு ஒரு முடிவு எடுக்க பழகிக் கொள்ளுங்கோ என்றது தான்.
அவாவோட முடிவுகளில இவ்வளவு வயசிலையும் அவாவுக்கு ஒரு பயம் இருக்கு. இப்படியே அந்த பயணத்தில சுவாரசியமாய் பலதும் அம்மாவிட்ட கேட்டு இருக்கன்.போகின்ற இடங்கள் இயற்கை அழகு, பழைய கதைகள் என்று அந்த பேச்சுக்கள் தொடர்ந்து கொள்ளும். சில பயணங்களில போகும் வழிகளில் கோயில் தரிசனங்களே அதிகமாய் இருக்குது. இப்படியே நான் சொல்ல நினைக்கிற விசயங்கள் என்னோட விருப்பங்கள், கனவுகள், கவலைகள் என்று தனிப்பட்ட ரீதியில கதைச்சுக் கொள்ளுறதுக்கான நல்ல ஒரு சந்தர்ப்பமாக இந்த பயணம் தான் என்னோட இருக்குது. ஒரு பயணத்தில் தொடக்கிய கதையை இன்னொரு பயணத்தில் தான் முடித்தும் இருக்கிறன். எல்லாத்தையும் கேட்டுக் கொண்டிருப்பா.அந்த பயணத்தின் திருப்தியே அந்த கதைகளின் முடிவுரை தான்.
© kavi kavya