...

4 views

போலி நம்பிக்கை !
ஒரு காலத்தில் / அடர்ந்த

ஒரு காட்டில் , வாழ்ந்த /

ஒரு நரி / தந்திரமாக ,

ஒரு பாவமும் அறியாத /

ஒரு முயலை / தன்னுடைய ,

ஒரு வேளை / உணவுக்காக ,


கொன்றது !

தின்ற பிறகு படுத்து,
நன்கு உறங்கியது !

மறு நாள் விடியும் நேரம் ,


ஒரு காது செவிடும்,

ஒரு கண் குருடுமான ,

ஒரு நரிக்குறவன் ,

ஒரு கூட்டாளியோடு சேர்ந்து,

ஒரு ஜோதிடனுக்காக ,

ஒரு கூரான ஈட்டியை எரிந்து ,



அந்த நரியைக் கொன்றான் !

சில மாதங்களுக்குப் பிறகு,



ஒரு நாள் அந்த ஜோதிடன்,

ஒரு வேலை காரணமாக,

ஒரு சத்திரத்தில்,

ஒரு இரவு தங்கும்படியானது !

ஒரு மணியிருக்கும் !

ஒரு நாய் ஊளையிட்டது !


அப்படியே,

காற்றில் மல்லிகைப்பூ வாசம் பரவியது !


ஒரு மரண பயம் சூழ்ந்தது !

ஒரு பத்து அடி தூரத்தில்,

ஒரு பயங்கர உருவம் ,

ஒரு ஈட்டியோடு எழுந்து ,

ஒரு ஒரு அடியாக வைத்து,

ஒரு வினாடி நேரத்தில்,


அவன் அருகில் வந்து நின்றது !

அதற்கு,

நரி மாதிரி முகம் !
முயல் மாதிரி காது !


ஒரு தனியறையில் அவன்,

ஒருவர் துணையுமில்லாமல்,

ஒரு பேயிடம் சிக்கிக் கொண்டான் !

நீதி:

எந்த காத்து கருப்பிடமிருந்தும்
எந்த பல்லும் காக்காது !
எந்த பல்லையும் நம்பாதே !

எந்த விலங்கையும்,
எந்த மனிதரையும்,

எந்த

நோக்கத்திற்காகவும்,
கொல்லாதே !

உணவுக்கான கொலையும்,
உலகில் உள்ள பல
சமூகங்கள் ஏற்க மறுக்கும்
கொலையே ஆகும் !

இது மறுக்கக் கூடாத உண்மை !

கடவுள் நம்பிக்கை,
கொல்லாமை ,
கடைபிடிப்பீர் !

© s lucas