ஒரு நாள் கூத்து
புதிதாக திறக்கப்பட்ட நட்சத்திர உணவகம் அது. தினமும் நான் கல்லூரிக்கு செல்லும் வழியில் பேருந்தின் ஜன்னல் வழியே எட்டிபார்த்தப்படி செல்வேன். மாருதி கார்களும், மாளிகையில் வாழும் மனிதர்களும் வந்து போகும் உணவகம் அது. கனவிலும் கூட என்னால் சென்று வர முடியாத அந்த உணவகத்திற்கு நான் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அன்று.
விடுமுறை நாள் என்பதனால் நானும் என் நன்பர்களும் விஸ்வாசம் படம் பார்த்து விட்டு பசியோடு பாவமான தோற்றத்தில் அந்த பைபாஸ் சாலை ஓரத்தில்.... நேரம் கடக்க கடக்க கால்கள் சுடச்சுட அந்த வேகாத வெயிலிலும் ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடித்துக் கொண்டு, வேகமாக ஓடியபடி சாலையின் இருபுறமும் ஓர் சிறிய உணவகம் ஏதேனும் தென்படுகிறதா? என உற்று நோக்கி கொண்டே கால்கள் பறந்தன. சுதந்திரமாக இந்த நாட்டில் வாழ வேண்டுமானால் பறவையாக பிறந்திருக்க வேண்டும் என்று அடிக்கடி நான் எண்ணியது உண்டு. ஆனால், அன்று நான் அந்த வெயிலில் ஓடும்போது தான் பறவையின் பசி வலியையும் கூட உணர்ந்தேன்.
அனல் காற்றில் ஓடிக்கொண்டிருக்கும் போது நடுவில் ஒரு நறுமணம் வீச தொடங்கிற்று. திரும்பினால் கம்பீர தோற்றத்துடன் அந்த புதிய நட்சத்திர உணவகம். நான் அங்கிருந்த வாட்ச்மேனிடம் மற்ற உணவகத்திற்க்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? எதற்காக இங்கு மட்டும் மக்களின் கூட்டம் அதிகம் காணப்படுகிறது என கேட்க, அவனும் ஆட்காட்டி விரலை வலதுபுறமாக மேல்நோக்கி நீட்டினான். அதை தொடர்ந்து, பாரம்பரிய உணவு இங்கு கிடைக்க பெறுவதாக அங்கு...