...

8 views

முகமூடி மனிதர்கள்
கொரோனா பரவல் அதிகம் இருந்த காலம். உலகம் முழுவதும் மக்கள் கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருந்தனர். நோய் பரவலை தடுக்க அரசாங்கம் அடிக்கடி ஊரடங்கு பிறப்பிப்பது உண்டு. அப்படி ஒரு நாள் மாலை ஆறு மணி முதல் ஊரங்கு என அரசு அறிவித்தது. அப்பா பலசரக்கு சாமான்லாம் இருக்குல்ல என கேட்டான் பெரியவன். இதெல்லாம் தெரிஞ்சு தான் உங்க அப்பா நாற்பது நாளைக்கான அனைத்து மளிகை சாமான்கள் காய்கறிகள் வாங்கி விட்டார்கள் என்றாள், அவன் அம்மா. ஏங்க எல்லாம் வாங்கிட்டோம். ஆனால் அந்த வெள்ளபூண்டு மட்டும் விட்டு போச்சு என்றாள். சரி வாங்கிட்டு வந்து விடுகிறேன் என்று கடைசி நேர கொள்முதலுக்கு வெளியே வந்தேன். சின்னவன் அப்பா மாஸ்க்கு போடு போடுன்னா கேட்க மாட்டியா. இந்தா போட்டு போ என வாசலில் வந்து கொடுத்தான்.

வண்டி நேராக டவுன்ஹால் ரோட்டில் உள்ள புதிய வரவான BG ஸ்வீட்ஸ் நோக்கி சென்றது. வழி எங்கும் கடைகள் அடைத்து கொண்டிருந்தனர். பிரேமா விலாஸ் அடைத்து விட்டான். BG ஸ்வீட்ஸ் அரை கதவு திறந்து வியாபாரம் பார்த்து வயிற்றில் பாலை வார்த்தான். தேவையானதை அள்ளி போட்டு கொண்டு கீழ மாசி வீதி நோக்கி வண்டி பறந்தது. கீழ மாசி வீதி நெருங்க நெருங்க மக்கள் கூட்டம் முகமுடி மனிதர்களால் நிரம்பி வழிந்தது.

திருவிழா காலங்களில் இருப்பது போன்ற உணர்வு. ஆனால் ஒரே வித்தியாசம் கொரோனா தொற்று பரவாமல் இருக்க பெரும்பாலோர் மாஸ்க் அணிந்திருந்தனர். வண்டி கீழ் மாசி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் எதிரில் உள்ள வெள்ளபூண்டு கடையில் நின்றது. தரமான பல்லு கிலோ இருநூறு ரூபாய். அரை கிலோ வாங்கி விட்டு வீடு வந்து சேர்ந்தேன்.