...

9 views

சிவா sir
எனக்கு எப்போதுமே கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் மீது மட்டுமல்ல என் கற்றலில் உதவி நண்பர் முதல் புத்தகம் பேனா ஏடுகள் வரை எல்லாவற்றின் மீதும் பெரும் மதிப்பு உண்டு...
என்னுடையது என்று மட்டுமல்ல..... எங்கு நோட்டுப் புத்தகம் போனாவை பார்த்தாலும் பத்திரப் படுத்துவேன் பெரும்பாலும் தீர்ந்து போனாலும் சேர்த்து வைப்பேன் எடுத்து பழைய புத்தகக் கடைக்கோ வேறு உபயோகத்துக்கோ தர மனம் வராது எப்போதும்!

அப்போ நீ நல்லா படிக்கிற புள்ள போல என்றொரு நினைப்பு வரும் உங்களுக்கு இன்னும் இளைய வயதினராய் இருந்தால்
இந்த அக்கா படிப்ஸ் போல என்றெல்லாம் தோன்றலாம்....
அப்படி இல்லை நான் பள்ளி வரை படிப்பில் நடுத்தர மாணவி தான்! எப்படியாவது படித்து விட வேண்டும் என்ற வைராக்கியம் ஒன்றைத் தவிர பெரிதாக வேறொரு விழிப்புணர்வும் இருந்ததில்லை.....
இன்றும் பொருளுக்காக இன்னும் ஏதேதோ வேலைக்காக எங்கள் வீட்டில் உள்ளோரை தேடி வருகின்றனர்
ஆனால் என்னைத் தேடி வரும் ஒன்றிரண்டு பேரும் அறிவு வேண்டும் என்று வருவோராகத் தான் இருப்பர்..... எனக்கு அலைபேசியில் அழைப்பு விடுப்பவர்கள் கூட என் அன்பின் பயன் கருதி அல்ல என் அறிவின் பயன் கருதியே அழைப்பு விடுப்பது உண்டு..... இந்த அவசர உலகில் எல்லாம் அப்படித் தான் ஒரு பயனுக்கு நடுவில் தான் அன்பையே தந்து விட்டு வருகிறோம் அனைவரும்......
அன்பிற்காக மட்டுமே வரும் அழைப்புகள் மிக மிக மிகச் சொற்பமே...... நாம் அப்படியொரு அவசர கதிக்கு ஆளாகி விட்டோம் அது வேறு கதை......

என்னை அறிவுக்காகத் தேடி வருகின்றனர் என்பதை நான் பெருமைக்காகச் சொல்லவில்லை.... என் வாழ்வு அப்படி..... சாண் ஏறினால் முழம் சருக்கும்..... எல்லாருக்கும் ஆனால் எனக்கோ முழுவதும் சருக்கும்......
அறிவோ தெளிவோ இல்லாமைக்காக அல்ல !
என் இயலாமைக்காகவே நான் அனைத்து இடங்களிலும் புறக்கணிக்கப்படுவேன்......

இந்தக் கல்வி மட்டும் இல்லையேல் வெறும் கல்லாகி
நான்கு சுவருக்கு நடுவில் நான் என்ற அடையாளம் இல்லாமல்
அப்படியே கிடந்து இறந்திருப்பேன்......

என்னை அடையாளப்படுத்தியது என் கல்வியே ...... அதனால் தான் இன்றும் ( என்றென்றும்) கல்வி சார்ந்த விடயங்களில் அத்தனை பிரியம்..... எழுதி முடித்த நோட்டைக் கூட எடுத்துப் போட மனம் வராது என்று சொன்னேன் அல்லவா.....

அப்படித்தான் ஒருமுறை (ஒருவருடம் முன்பு) நான் எங்கள் பள்ளிக்கு ஆசிரியர் மாணவ ( Teacher trainee )பயிற்சிக்குச் சென்று கொண்டிருக்கும் போது எல்லாரும் ஆசிரிய ஓய்வறையில் ( Staff room) மதிய உணவருந்தும் போது கீழே உணவு சிந்திவிடக் கூடாது என்பதால் பேப்பர் வைத்து அதன் மேல் சாப்பாட்டுப் பாத்திரத்தை வைத்து சாப்பிடுவதுண்டு ...... அதற்காக மதிப்பிட்டு முடித்த மாணவர்களின் பழைய தேர்வுத் தாளை உபயோகிப்பதுண்டு..... ஒவ்வொரு நாள் மதியமும் அவர்களும் எடுத்துக் கொண்டு எனக்கும் எடுத்துத் தருவது உண்டு...... ஒவ்வொரு முறையும் அந்த தேர்வுத் தாளை கீழே உபயோகப்படுத்தும் போதெல்லாம் எனக்கு உறுத்தும்...... பலமுறை சொல்வதும் உண்டு ஷைலா மேம்மிடம்.....(Shyla mam 😊🤩)அவர்களும் அது முடிந்து போனது தானே அதனால் என்ன என்று சொல்லி எடுத்துத் தருவார்கள்! அப்படியொரு முறை நான் சொல்வதை சிவ சார் கேட்டு விட்டு நீ என்ன சொன்னம்மா இப்போ அதை மீண்டும் இன்னொரு முறை சொல் என்றார்.... நானும் இந்த டெஸ்ட் பேப்பரை வைத்து சாப்பிடரோமேனு வருத்தமா இருக்குதுங் சார் என்றேன்...... இல்ல வேற ஒன்னு சொன்னியே என்று கேட்டாங்க உறுத்தலா இருக்குதுன்னு சொன்னனுங்க சார் என்றேன்..... அதற்கு சிவா சார் சொன்னாங்க இந்த உறுத்தல் உனக்குத் தேவையில்லை...... தேவையில்லைனு எடுத்துப் போட்ட ஒன்றை நாம் உபயோகப் படுத்தி வீசறோம்னு நீ சந்தோசப்படனும் என்று ..... அன்றிலிருந்து இன்றுவரை எழுதி முடித்து வேண்டாம் என்று வைத்த நோட்டில் பேப்பரைக் கிழிக்கும் போதெல்லாம் அவரின் சொற்களை அடிக்கோட்டுக் கொள்கிறது என் மனம்.....

உண்மை தானே பயன்படுத்திப் பயனின்றிப் போன ஒன்றை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம் ஒருவகையில் எண்ணினால் அந்த டெஸ்ட் பேப்பர் இரண்டு முறை பயன்படுகிறது...... விருத்தவாய்ப் போக இருந்த பேப்பரை நாம் பயன்படுத்திக் கொண்டதில் அதற்கும் மகிழ்வு தானே.....☺️☺️


"அடிக்கோடிடுவதின் மூலம் எங்கோ இருக்கும் எழுத்தாளனிடம் வாசகன் கை குலுக்குகிறான் "என்று நா.முத்துக்குமாரின் அப்பா நாகராஜன் சொன்னது போல,
ஆசிரியர்களை விட்டு தூர வந்து விட்டாலும் அவர்கள் சொன்ன வார்த்தைகள் நம்முடனேயே பயணிக்கிறது!!!!

சிவா Sir ......😊🤩

மாணவியாக இருந்த போதும் சரி !
ஆசிரிய மாணவியாக இருந்த போதும் சரி!
பள்ளி அனுபவங்கள் பசுமையானவை!
மணம் மாறா ஆசிரியர்களின் மனம்....
மறக்குமா நெஞ்சம்!!!!!

#அகரம்_தொடங்கி_அகிலம்_வரை
#தமிழ்நிழல் #School #memories

@tamilnizhal2512