...

7 views

மெய் தேடல் தொடங்கியதே
அழியாமை என்னும் ஆசை இந்த உலகத்தின் பல அறிஞர்களை நீண்ட ஆயுளையும், மோசமான மரணத்தையும் நோக்கி இட்டுச் சென்றுள்ளது.

எல்லோரும் மரணத்தை ஏதோ ஒரு வகையில் அங்கீகரித்தார்கள். ஆனால் மனித வரலாறு பரலோகத்தின் பரிசான அழியாமையைத் தேடுவதன் மூலம் தொடங்கியது.

இந்த கதை முன்னோர்களின் பாதையில் இருந்து புதைக்கப்பட்ட ரகசியங்களை கண்டுபிடிப்பதை பற்றியது.

இது என்னுடைய முதல் கதை. ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதை பற்றிய கருத்துக்களை பகிரவும்.

அத்தியாயம் 1

வாழ்க்கையின் மர்மங்களை ஒளித்து வைத்திருக்கும்  காட்டுக்குள் ஸ்டெஃபி செல்லும் வரை எல்லாம் சாதாரணமாகத்தான் இருந்தது....

இது ஒரு அமைதியான மாலை வேலை.  வளர்ந்து வரும் இருளுக்கு எதிராக அம்பர் விளக்கு வெளிச்சங்களில் ஹெர்லிச் நகரம் தன்னை பிரகசமாக வெளிக்கொணர்ந்தது.

இளவரசி ஸ்டெஃபி நகரத்தின் நடுவில் இருக்கும் அழகான நீரூற்றுக்கு அருகில் அமர்ந்து, அடர்ந்த பச்சைக் காடுகளுக்கு இட்டுச்செல்லும்  சாய்வான மலைப்பகுதிகளின் அழகைப் பார்த்துக் ரசித்து கொண்டிருந்தாள்.

அவள் தனது பண்ணிரண்டு வயதின் முனைப்புகளில் இருந்ததால் சாகசத்தை அனுபவிக்க தனது சகோதரியுடன் காட்டுபகுதிகளில் பயணம் செய்ய நினைத்தாள்.

இரட்டைப்பிறவியான ஸ்டெஃபி மற்றும் ஸ்டேசி பன்னிரெண்டு வயதினராய் மலர்ந்திருந்தனர், ஸ்டெஃபி பழுப்பு நிற முடியும்,  கோதுமை நிற  வெளுப்புடனும் திராட்ச நிறக்கண்களையும் கொண்டிருந்தாள்.

ஸ்டேசிக்கு பழுப்பு நிற கண்கள் தவிர மற்றதெல்லாம் ஸ்டெஃபியுடன் ஒத்திருந்தது. இவள் ஸ்டெஃபியைவிட  குறும்புக்கார மகிழ்ச்சியான பெண்.

அவர்கள் இருவரும் எல்லா இடங்களிளும் சிறந்த தோழமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக தங்களை நிரூபிக்க நினைப்பார்கள்.
ஒன்றாக  இருக்கும் நேரத்தில் குற்றங்களின் பங்காளிகளாக வலம் வந்தனர். மேலும் அவர்கள் கோட்டையில் செய்யும் ஒவ்வொரு குறும்புச் செயல்களும எல்லோரையும் கலகலப்பாக இருக்க செய்தது .


அவர்கள் நகரத்தின் நடுவிலிருந்து வீடு திரும்பியபோது, ​​அவர்களின் பெற்றோர் அவர்களைத் கட்டி தழுவி, இரவு உணவிற்கு ஒன்றாக அமரச் செய்தனர்.

ஸ்டெஃபி பேச விரும்பியபோது, ​​அவளது தந்தை தனது அடுத்த நாள் பயணத்தைப் பற்றிய உரையாடலைத் தொடங்கினார்.

ஸ்டெஃபியின் முகம் சிறிது மாறியது. அவள் தனது இரட்டை சகோதரியைப் ஓரமாக பார்த்தாள்.

இவைகளை பார்த்து கொண்டிருந்த அவளது அம்மா ஸ்டெஃபியின் முகத்திலிருந்த வெற்று தோற்றத்தைக் கண்டு அதைப்பற்றி விசாறித்தார்.

அதற்கு ஸ்டெஃபி "நாங்கள் இருவரும் வளர்ந்தவுடன், இந்த உலகத்தையும் காடுகளின் தன்மையையும் ஆராய வேண்டும் என்று நிணைத்திருந்தோம். அதனால் நாளை காடுகளில் முகாம் போட திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அப்பா ஊரில் இல்லை என்றால் காடுகளுக்கு  செல்ல அனுமதி
தரமாட்டார்" என்று கூறினாள்.

ஸ்டேசியும் ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.

இதை கேட்ட தந்தை அவர்கள் இருவரது தோல்பட்டையிலும் கை வைத்து தனது பிள்ளைகள் இருந்த திசையில் குனிந்து, அவர்களை ஒரு குறுகிய பயணத்திற்கு அனுப்புவதாக உறுதியளித்தார்.

அவர்களது பெற்றோர் மகள்களுடன் செல்ல முடியாததால் மறுநாள் இருவருக்கும் ஒரு குறுகிய பயணத்தை தயார் செய்தனர்.

மூன்று நாட்களில் நடைபெறவிருக்கும் மறுமலர்ச்சி திருவிழாவைப் பற்றி கவலைப்பட்டதால், அரண்மணையில் நடக்கும் வேலைகளை மேற்பார்வையிட ராணி கோட்டையில் தங்க முடிவு செய்தார்.

அடுத்த நாள், அருகிலுள்ள ஊரில் வசிக்கும் தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் விழாவிற்கு அழைக்க மன்னர் புறப்பட்டார்.

ஒரு சிறிய பரிவாரங்களுடன் ஸ்டெஃபி மற்றும் ஸ்டேசி தங்கள் குதிரைகளுடன் அடர்த்தியான காட்டில் பயணம் செய்கித் தொடங்கினார்கள்.

சிறிது நேரத்தில், ஸ்டெஃபி ஒரு ஆழமான கூர்மையான குரல்களை அவளது இரு காதுகளிளும் உணர்ந்தாள், அது அவளை வியக்கத்தில் ஆழ்தியது. குரல்கள் மறைந்தவுடன், அவளுடைய தோழர்கள் யாரும் அந்தக் குரல்களைக் கேட்கவில்லை என்பதை அவர்கள் முகத்தைப் பார்த்து அறிந்து.கொண்டாள்.

நடந்தது அவளது நிணைவோட்டத்தில் வந்து வந்து போனது....  அவளது கண் முன்பு ஒரு சிறிய வட்ட வடிவமான பந்து போல் இருந்த ஒளியை தன் இதயத்தில் ஏற்று கொள்ளுமாறு அந்தக் குறல்கள் அவளை வற்புறுத்திக்கொண்டிருந்தது. ஒளியின் உஷ்ணத்தை உணர்ந்த அவள் அதைத்தாங்க முடியாமல், பதிலுக்கு அவள் "என்னால் இந்த உஷ்ணத்தை தாங்க முடியாது. நான் வெறும் சதை தான்" என்று கெஞ்சும் வரை அந்தக் குரல்கள் அவளை விட்டு ஓயவே இல்லை.

மதிய வேளையில்,  நீர்வீழ்ச்சிகளை
நோக்கிச் அடர்த்தியான காட்டின் நடுவில் செல்லும்போது
சூரியன் ஒளியின் சில கதிர்களை இலைகளின் இடைவெளிகளில் சிந்திக்கொண்டிருந்தது.

நீர்வீழ்ச்சியின் மறுபுறம், அவர்கள் நின்ற இடத்திலிருந்து
குறிப்பிட்ட தொலைவில் ஒரு சிறிய கூரையைப் பார்த்தார்கள். புதிய திசையில் செல்வதற்கு முன் அந்த இடத்தில் ஒரு சிறிது நேரம் ஓய்வு எடுக்க முடிவு செய்தனர்.

ஆனால், ஸ்டெஃபி, அவள் பார்த்த ஒரு நெருப்பு பந்தை தன் உள்ளத்தில் பிடிக்குமாறு அவளது காதுகளில் கிசுகிசுக்கும் எதிரொலிகளில் முழ்கிக்கொண்டிருந்தாள்.

அவளுடைய எண்ணங்கள் தீவிரமடைந்ததால், அந்த மாய வனத்தின் ரகசியங்களையும், ஆவி உலகத்தின் அழைப்பை
பற்றியும்  ஆராய்ச்சி செய்ய
முடிவு செய்தாள்.

அந்த கூரை வீட்டின் முன்புறம் இருந்த மரத்தூண்களின்கீழ், ஒரு வயதான சூனியக்காரி உட்கார்ந்து சோலியில் எதிர்காலத்தைப் படித்துக்கொண்டிருந்தார்.

ஸ்டெஃபி சூனியக்காரியை அணுகி அவள் காதுகளில் ஒலிக்கும் குரல்களைப் பற்றிய சந்தேகத்தை கேட்டாள்.

சூனியக்காரி ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு அவளை ஓய்வெடுக்க சமிக்ஞை செய்தார். அவளுடன் வந்தவர்கள் அனைவரும் சுற்றி இருந்த இடத்தில் ஓய்வு எடுக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே, சூனியக்காரி அவளுக்கு நடந்தை பற்றிய கேட்கத் தொடங்கினாள்.

முன்பு என்ன நடந்தது என்பதை ஸ்டெஃபி விளக்கிவிட்டு பொறுமையாக காத்திருந்தாள்.

அந்த வயதான சூனியக்காரி ஆச்சர்யப்பட்டுவிட்டு மறுபடியும் தொடர்ந்தார்,

"இந்த தெய்வீக தகவலை பண்டைய ஆவிகளிடமிருந்து பெற நீங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளீர்கள்.

இந்த ஆவிகள் உங்கள் வாழ்க்கையில் வரவிருக்கும் நிகழ்வுகளின் அறிகுறிகளையும், எதிர்பாராததை எதிர்பார்க்க சில தெய்வீக சிறப்புகளை உங்களுக்கு முன்னறிவிக்கும்"

ஸ்டேசி அமைதியற்றவளாகவும் குழப்பமாகவும் இருந்தாள்.

ஸ்டேசி சூனியக்காரி பேசும் போது தலையிட்டாள், "இந்த நோக்கத்தை நிறைவேற்ற அவள் மிகவும் சிறப்பு வாய்ந்ததன் காரணம் என்ன?". என்று வினவினாள்.

சூனியக்காரி பதிலளித்தார், பல வகையான ஆவிகள் மனிதர்கள் மூலம் தங்கள் நோக்கம் நிறைவேற சிலரை தேர்ந்து எடுத்து தங்கள் உலகத்திற்கு கூட்டி சென்று இரகசியங்களை வெளிப்படுத்துகின்றன.


ஆயினும் இந்த காடு ஒரு ஷாமனால் (shaman - மத குருவாகவும் மருத்துவராகவும் இருப்பவர், ஆவித் தொடர்பு கொண்டு ஆச்சரியம் நிகழ்த்துபவர்)  நீண்ட காலத்திற்கு முன்பே மந்திரத்தின் கட்டுக்குள் வசப்பட்டுவிட்டது. இங்கு நிறைய அமானுஷ்யங்கள் நடந்தேறி இருக்கிறது, என்றும் கூறினாள்.

சில எண்ணங்களுக்குப் பிறகு, பொல்லாத சூனியக்காரி தந்திரமாக ஒரு திட்டத்தை தீட்டி, ஸ்டெஃபியையும் ஸ்டெசியையும் ஒருவித மந்திர சக்திகளைக் கொண்ட அரிதாக காணப்படும் மரகதக்கல்லைத் தேடும்படி முற்படச்செய்தாள்.

"இந்த அரிய வாய்ப்பை இழக்காதீர்கள் நண்பகளே".

"இதை புத்திசாலித்தனமாக பயன்படுத்த நினைவில் கொள்ளுங்கள் ..."
என்று சூனியக்காரி அறிவுறுத்தினாள்.

மேலும், "உங்கள் தெய்வீக  அழைப்பை
முன்னறிவிக்கும் ஆவிகள், உங்கள் கேள்விகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் உங்களிலுள்ள சக்திகளின் மூலம் பதில்களைக் கொண்டு வரட்டும்".
என்றும் கூறி முடித்தாள்.

ஸ்டேசி ஸ்டெஃபியை மறுபடியும் குழப்பமாக பார்த்தாள்.

தனது முழு வாழ்க்கையையும் மாற்றும் திறன் கொண்ட சில நுண்ணறிவு, வழிகாட்டுதல் அல்லது வெளிப்பாட்டை சூனியக்காரி வெளிப்படுத்தியிருக்கக்கூடும் என்று ஸ்டெஃபி நம்பினாலும், ஒரு மாய பொருளைக் கண்டுபிடிப்பதற்காக தனது உயிரைப் பணயம் வைக்கும் நிலையைக் குறித்து கவலையாக இருந்தாள்.

திடீரென காடுகளில், அவளுடைய குதிரை சறுகளான பாதையில் விலகிச் செல்லப்பட்டபோது தனித்து விடப்பட்டாள்.

அவள் தனக்கு பின்னால் பார்த்தாள், அவளுடைய கண்களுக்கு எட்டியவரை, ஸ்டேசியும் காவலர்களும் அவளுக்குப் பின்னால் அவளைத்தேடி வந்திருக்கவில்லை.

அவள் தனக்கு தெரிந்த திசையில் செல்லத் தீர்மானித்தாள். காடுகளின் நடுவில் வழிதவறினதால் திசை அறியாமல் சுற்றி திறிந்தாள்.

அது ஒரு அடர்ந்த காடு மட்டும் அன்றி இப்பொழுது அடர்த்தியான கருப்பு  நிற புகையும் அவளை எல்லா பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைத்தது.

அங்கே அந்த புகை நடுவில் இருந்து ஒரு உருவம் ஊடுருவி அவளை நோக்கி வந்து கொண்டிருந்து.  பக்கத்தில் வந்த அந்த வயதான மனிதர் அவள் தேடும் அந்த மரகத கல்லை அவர் வைத்திருந்த பையிலிருந்து எடுத்து கொடுத்தார்.

அவள் கைகளை நீட்டி கல்லைப் பெற்றுக்கொண்டு அதனை ஆழமாகப் உற்றுப் பார்த்தாள்.

அவளுடைய ஆவிக்கும் அந்த மரகத கல்லுக்கும் எந்தவித தொடர்பையும் அவள் உண்மையில் உணர்ந்திருக்கவில்லை.

அவள் அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
அந்த முதியவர், "இது உங்களுக்குத் தகுதியானதும் அல்ல, உகந்தும் அல்ல" என்றார்.

அவள் மீண்டும் அதை  பார்த்துவிட்டு கேள்விகளைக் கேட்க முயன்றபோது, ​​அந்த முதியவர் கண நேரத்தில் மறைந்துவிட்டார்.

மீண்டும் அவள் காட்டில் தனியாக விடப்பட்டு இருந்தாள். வீட்டிற்கு திரும்பும் வழியைக் கண்டுபிடிக்க அவள் சிறிது தூரம் இங்கும் அங்குமாக நடந்து சென்று பார்த்தாள்.

ஆனால் வீணாக சுற்றுவது போல் ஆரம்பித்த இடத்திற்கே மறுபடியும் வர நேர்ந்தது.  பாதையிலிருந்து அலைந்து திரிந்தனால் களைத்துப் போனாள்.

திடீரென்று, அருகிலிருந்த புதரிலிருந்து சத்தம் கேட்டதும் வெடுகென்று திரும்பி பார்க்கும் பொழுது ஒரு ஓநாய் அவள் மேல் பாயும் விதமாக நின்று கொண்டிருந்து.

அந்த நேரத்தில் அவள் விரும்பியதெல்லாம் அந்த இடத்திலிருந்து விலகிச் செல்வதுதான்.

ஆனால் அவள் ஓட நிணைத்து கீழே விழுந்தனால் விலகிச் செல்வதைப்பற்றி அவளால் யோசிக்க கூடாமல் போனது.

வலியையும் மீறி அவள் எழுந்து ஓட முயன்றபோது, ​​அவளுக்குள் ஏதோ விசித்திரமாக உணர்ந்தாள்.

திடீரென "இங்கே இருக்கிறாள்" என்று அவள் பின்னால் ஒரு குரல் ஒலித்தது.

அவளுடன் கூட வந்தவர்கள் அங்கே நின்று கொண்டு அவளைப் பாதுகாக்க தொடங்கினர். ஓநாய்யை தீப்பந்தங்களால் விரட்டியடித்தனர்.

அவர்களைச் சந்திப்பது, அவள் குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைவதைப் போன்று உணர்ந்தாள்.

ஸ்டேசி அவளைத் கண்டவுடன் தழுவிக் கொண்டாள். ஒருவருக்கொருவர் மறுபடியும் இணைந்ததில் இருவரும் சகஜமான நிலைக்கு திரும்பினர்.

தொடர்ந்து வீடு திரும்ப எல்லாரையும் திரட்டிக் கொண்டு கிளம்பினர்.

இந்த பயணம் முடிவதற்கு அவர்கள் கோட்டையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தனர்.

காட்டில் அவள் தனியாக இருந்தபோது மட்டும் அசாதாரணமான விஷயங்கள் அதிகமாய் நடப்பதாக உணர்ந்தாள்.

"ஆவிகளின் குரல் கேட்பது சிறப்புமிக்க ஒன்றானதாகத்தான் இருக்க வேண்டும்" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

காட்டில் இருந்து திரும்பும் போது, ​​ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்யவும்  தனது வாழ்க்கையில் எதையாவது சாதிக்க பிறந்தது போன்றும் உணர்ந்தாள்.

இருப்பினும், சூழ்நிலை அவள் கைகளின் கட்டுக்குள் இல்லாததால் அதை அடைவதற்கான சாத்தியங்களை அவள் காணமுடியவில்லை.

மில்லியனில் ஒருவருக்கு மட்டும் நடக்கும் ஒரு புதிய வகையான சாகசத்திற்கான ரகசிய பாதைகளைப் தான்  பின்பற்றி செல்ல வேண்டும் என்பதை வெகு விரைவில் அவள் உணர்ந்து கொள்வாள்....




"ஒரு வெற்றிகரமான வாழ்க்கையின் முழு ரகசியமும் ஒருவரின் விதி என்ன என்பதைக் கண்டுபிடிப்பது, பின்னர் அதைச் செய்வது."


© BeulahB