...

5 views

பொதுத் தேர்வு
இன்றோடு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிந்தது....
இம்முறை எங்க பெரிய மாமா பொண்ணு பொதுத் தேர்வு எழுதினாள்..... இந்தக் கொஞ்ச நாளாக நான் அவளுடன் தான் இருக்கிறேன்..... அவள் படிக்கட்டும் என்பதற்காகவே கொஞ்சம் விலகியும் இருப்பேன்..... அவள் தான் படிக்கப் போவதையும் படித்து முடித்ததையும் தினமும் என்னிடம் சொல்லி விடுவாள்..... எங்களுக்குள் ( எனக்கு அவள் மேல்) இவ்வளவு அந்நோந்நியமான அன்பு உருவாகக் காரணம் அவள் என் தாய் மாமன் என்பது மட்டுமே அல்ல..... அவள் நான் படித்த பள்ளியில் நான் படித்த ஆசிரியர்களோடு தினமும் பயணிக்கிறாள் என்பதே..... இது ஒருபுறம் இருக்கட்டும்.....

அவள் தேர்வு எழுதுவதற்கு முன்பிருந்தே கொஞ்சம் பயமாக இருக்குது கா! எப்படி எழுதுவேன்னு தெரியல ! என்று சொல்லிக் கொண்டே இருப்பாள்.....
அவள் சொல்லும் ஒவ்வொரு முறையும் நான் சொல்வேன்
நானும் தான் படித்தேன் இப்போ யாராவது 10 வது மதிப்பெண் 11 மதிப்பெண் 12 வது மதிப்பெண் இப்படி எல்லாம் கேட்கவா செய்யறாங்க மதிப்பெண் எவ்வளவோ வரட்டும் அது பற்றிக் கவலைப் படாத நமக்கு அறிவு தான் முக்கியம்! மதிப்பெண்ணுக்கும் அறிவுக்கும் சம்மந்தம் இல்லை..... நிறைய தேடு! படி! தெரிஞ்சுக்கோ! எது புடிக்குதோ அத படிக்கலாம் மேற்கொண்டு.....

ஆனால் அதற்காக படிக்காமல் விடக் கூடாது..... நல்லா படிக்கனும்.... பிற்காலத்துல நெனச்சு பாக்கும் போது அச்சச்சோ இன்னும் கொஞ்சம் நம்ம நல்லா படிச்சுருக்கலாம் என்று நினைத்து வருந்தாத அளவுக்கு படுச்சர்னும்....

‌‌அது மட்டுமில்லாம உனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரை மீண்டும் பார்க்கும் போது மிஸ் நல்லா சொல்லிக் கொடுத்தாங்க சார் சொன்னது எல்லாம் வந்துச்சு நம்ம தான் படிக்காம போயிட்டோம் என்று அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் உனக்கு உறுத்தல் வராத அளவுக்கு ( பலருக்கு இந்த உறுத்தல் வராது😜 அது தனி..... அவர்களைப் பற்றி இங்கு பேசவில்லை ஆனா நம்ம ஆசிரியருக்கு உண்மையா இருந்திருந்தா இந்த உறுத்தல் வரும் வரனும் அவன் தான் உண்மையான மாணவன்) உன் மன சாட்சிக்கு உண்மையா உறுத்தாத அளவுக்கு எழுது அது போதும் என்று சொன்னேன்!

இன்று பல மாணவர்களை நல்ல மார்க் எடுத்துரனும் படி படி என்று பயமுறுத்தி மாணவர்களுக்கு வாழ்க்கையை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை...... தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை இழக்கச் செய்து விடுகிறோம்! அப்படியில்லாமல்
முடிந்த அளவு முயற்சி செய் என்று சொல்லி அவர்கள் கவனம் சிதறும் போதெல்லாம் குடும்ப நிலையை சமூக நிலையை எடுத்துக் கூறி படிக்கச் சொல்லலாம்

வெறுமனே மதிப்பெண் கல்வி மட்டுமே உதவாது! வாழ்க்கை மதிப்புக் கல்வியே ஒருவரது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் !

_- தமிழ்நிழல் ✍🏾

#அகரம்_தொடங்கி_அகிலம்_வரை #தமிழ்நிழல் #மதிப்பெண் #கல்வி #public #10thPublicExam #education #கல்வி #சமூகம்