மென் காதல் கதை ((2))
மலர் யாருங்க போஸ்ட் வந்திருக்கு
வந்து கையெழுத்து போட்டு
வாங்கிக்கங்க வாங்க
என்றார் போஸ்ட் மேன்.....
மலர் என்று அழைத்ததும்
ஓடி வந்தாள்....
மூச்சுக் காற்று தீண்டத்
தீண்ட வாங்கிக் கொண்டாள்
அழைப்பிதழை.....
பிரித்துப் பார்த்ததும்
அவளது விழிகள் தேடியது
அவனின் பெயரை மட்டும்
தான்.....
ஆமாம் அதில் இருந்தான்
அன்பு அண்ணன் சுடர் என்று....
முத்தமிட்டு மார்போடு
அணைத்தாள்... அணைந்தும்
போனால்...
பெண்ணின் ஏக்கம் அல்லவோ
கொஞ்சம் ஈரம் கோர்த்தெடுத்து
நின்றது .....
என்று எப்போது எங்கே
எப்படி என்று எல்லாம் பார்த்து
முடித்து மடித்து வைத்து காத்திருந்தாள்...
அந்த பொன்னான
நாளுக்காக.....
விரல் விட்டு எண்ண வில்லை அவள்
விழியின்
உதவியால் மனக் கணக்கு
போட்டுக் கொண்டிருந்தாள்....
தீர்ந்து போன நாட்கள்
நின்ற தினமாய் விடிந்தது..
அந்த காலை நேரத்து சூரியனும்
அவளைக் காதல் செய்திட
அழைப்பதை போன்று
புள்ளி மான் போலே ஓடி ஆடி
கிளம்பி முடித்தால்......
பரிசுப் பொருளாக ஓர் வெள்ளிக்
குங்குமச் சிமிழையும்
ஒரு மோதிரமும் வாங்கி
வைத்துக் கொண்டால்.....
அழகான முகம்
அதற்கு நேர்த்தியாய் ஒரு
மஞ்சள் நிற காட்டன் சேலை
சூழ்ந்த பொம்மையாக இருந்தால்....
கொஞ்சம் தூரப் பயணம் என்ற போதும்
களைப்புகள் இல்லா
அழகுடன் திகழ்ந்தது அவள்
உளம்......
பேருந்து நிறுத்தம் வந்து விட்டது
இறங்கியதும் ஆட்டோ அழைத்தால்...
அங்கு போக வேண்டும் இவ்வளவு
பைசா ஆகும் என்று...