...

18 views

கண்ணாடி
கீழிருந்து சில படிகள் ஏறிச்செல்ல முடிவில் அந்த விரும்பத்தகாத அறைகளை பார்க்க முடிகிறது. மனம் ஏற்றுக்கொள்ள தயங்கும் எதிரெதிர் அடுக்குகளில் அந்த அறைகள் விளக்கின் மஞ்சள் ஒளி சூழ்ந்து இருந்தன.

மைய அறைக்கு முன்பாக அந்தக்கால தகர சேர்களும் இந்தக்கால பிளாஸ்டிக் சேர்களும் இருந்தன. அதில் மனிதர்கள் அவரவருடன் இருந்தனர்.

ரபேசன். நகரின் பிரபலமான மனநோய் மருத்துவர்.

இவர் நண்பர் என் முதலாளி. முதலாளி டாக்டருக்கு கொடுத்த விட்ட ஒரு கவருக்கு நான் தூதுவன். கொடுத்து விட்டு கிளம்பி விடுவேன். நேரே பார்த்து கொடு என்பது உத்தரவு. நான் உத்தரவுக்கு பணிவேன்.

அவருக்கு காத்திருக்க எனக்கு சம்மதம். காத்திருந்தாலும் அந்த நேர உளைச்சலை எல்லாம் இந்த டோக்கன் கொடுப்பவள் செவ்விய இடை போக்கிவிடும்.

உக்காருங்க... சற்று கிசுகிசுப்பான அந்த கட்டளைக்கு உரிய மரியாதையுடன் அந்த ஆள் அருகில் அமர்ந்து கொண்டேன்.

அந்த 'இடை' கண்களால் மொத்த கூட்டத்தையும் அளந்து எல்லோர் கையிலும் ஒரு எண்ணை கொடுத்தது. எனக்கும் வந்தபோது நான் வந்த விஷயத்தை சொன்னதும் 'இடை' டாக்டர் வரட்டும் என்றபடி போய் விட்டது.

அந்த கூட்டத்தில் ஒரு பதினைந்து பேர் இருக்கலாம். அதில் ஏறத்தாழ பாதி மனநோய்காரர்கள். அந்த நோய் பெயர் கூட தெரியாது. அவர்களுக்கு அப்படி எதுவும் சொல்லப்படாது.

நோயின் உக்கிரத்துக்கு ஏற்ப கரண்ட் முதல் மாத்திரை வரை தரப்பட்டு அவர்கள் தங்களுக்குள் நிம்மதியாய் இருந்த அழகான உலகம் சின்னாபின்னமாய் அழிக்கப்பட்டு மீண்டும் இந்த யதார்த்த உலகுக்கு அழைத்து வரப்படுவர்.

பின் அவர்களும் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி கொள்ள முடியும். சொத்து பத்திரத்தில் ஒப்பமிடவும் முடியும்.

என்னை பக்கத்தில் அமர சொன்ன ஆள் கொஞ்சம் விவரமான ஆள் போல் இருந்தார். கையில் ஒரு நீயூயோர்க்கர் மாகசின் இருந்தது. என் வாசிப்பு அறிவை காட்ட கழுத்தை ஒட்டகம் போல் ஒடுக்கி அதை உற்றுப்பார்க்கும்...