...

6 views

வரமாகிய காதல்...3
"அந்த அரைமணி நேரம்"
அழகான பேருந்துப் பயணம்,
அவனும் அவளும் அருகருகே!
மௌனம் மட்டுமே
அங்கு பேசியது!
அவனின் கண்கள் அவள் மேல்!
அவளின் கண்களோ, ஜன்னல் வழியே
வரும் தென்றல் காற்றில்!
இருந்தும் இருவரின்
கைகளும் ஒன்றை ஒன்று
பின்னி இருந்தன!
ஆரவாரமின்றி அழகாய்
ஓடிய அந்த
" அரை மணி நேரம் "

"அந்தி மாலையில்"
தென்றல் வீசும் அந்நேரத்தில்,
பேருந்தில்
இருந்து இறங்க,
அதுவரை குடி கொண்ட
மௌனம் கலைந்து,
"ரதி" தன் மெல்லிய குரலில் சொன்னாள்!
"போய் வருகிறேன்"
என்று!
" சிறிது நேரம் கழித்து செல்லேன்"
என்றான் "சக்தி"
சற்று ஆர்வமாய்!
அவளவனின் அன்பான வார்த்தையை
கேட்ட அவள்
வெட்கத்தில் நெகிழ்ந்தாள்!
ஆனால்,
அவளின் நாணம் அவளை
அங்கிருந்து ஓடச் சொல்ல ,
தன் முகத்தில் புன்னகை
காட்டி தலையசைத்து
ஓடினாள்!
அவன் அவனவளின் வெட்கத்தை
ரசித்தவனாய்,
அக் கம்பத்தில் சாய்ந்து,
அவளின் நிழல் மறையும் வரை
அவளை ரசித்தவனாய்
நின்றான்!

இரவு முழுவதும்

இருவரும் உறக்கமின்றி தவிக்க,

மறுநாள் காலை அவசரமாய்

பள்ளிக்கு கிளம்பினாள் "ரதி"

ஆம்! இவள் இப்பொழுது தான்

மேல்நிலை முதலாம் ஆண்டு

சென்றிருக்கிறாள்,

அவளின் நகரப் பேருந்து நிலையத்தை

அவசரமாய் அவள்

அடைகையில் மணி காலை 7:10;

அதிர்ஷ்டவசமாக இன்னும்

பேருந்து அங்கிருந்து கிளம்பவில்லை!

மூச்சிறைக்க பேருந்தில்

ஏறியவள் ,

அவளமரும் இருக்கையில்

அமர,

சிறிது இளைப்பாறினாள்;

திடீரென ஒரு நிழல்

அவளருகில் நிற்க,

அந்த நிழலை அசட்டை

செய்தவளாய்,

பேருந்தின் ஜன்னலை திறந்து

காற்று வாங்கினாள்!

ஆனால், அந்நிழலில் இருந்து

அவள் மனம் விரும்பும்

அக்குரல் ஒலித்தது,

"ரதி" என்று!

சற்றும் எதிர்பாராதவளாய்,

அவன் குரலைக்

கேட்டதும் அவளின் உடல்

சில்லிட்டது!

ஆம்!

என்றும் மாலையில்

மட்டுமே அவனை பார்த்துப் பழகியதால்,

இக்கணம் அவனை அவ்விடம்

அவள் எதிர்பார்க்கவில்லை!

ஆம்!

திடீரென அவளின்

"கண்ணெதிரே தோன்றினான்"

அவளின் மனம் கவர்ந்த நாயகன்!

"எத்தனை தான் அழகு இந்தக் காதலில்! "

அவனை அங்கு கண்ட
அதிர்ச்சியில் அவள்,
" நீ... நீ.. . நீங்க..... இங்க... "
என கேட்க,
அவன் புன்னகைத்தவனாய்,
"உன்ன பாக்கத்தான்"
என்றான்;
அக்கணம் அவள் மனம்
நெகிழ்ந்தாள்!
ஆனால்,
மறுகணம் யாரேனும் கண்டுவிட்டால்!
என பதற்றத்தில்,
அவளின் கண்கள்
சுற்றும் முற்றும் அலைமோத....
அடுத்த கனம்,
அவளின் கைகளுக்குள்
அவனின் கைகள்..
பிணைந்திருந்தன!
ஒரு வழியாக அவன் கைகளிலிருந்து
அவள் கைகளை விடுவித்த போது
அவள் கையில் ஒரு காகிதம் இருந்தது!
கண்கள் மின்ன அக்காகிதத்தை
பார்த்தவளாய்,
அவனைப் பார்க்க,
அவன் அவளருகில் இல்லை
என உணர்ந்தாள்;
சுற்றும் முற்றும்
அவளவனை கண்கள் தேட,
பேருந்து நகர்வதை உணர்ந்தாள்!
ஆனால்,
அவள் பின் இருக்கையில்
இருந்து ஒரு மெல்லிய குரல்
"ரதி" என்று!
சற்றும் எதிர்பாராதவளாய்
திரும்ப,
வெட்கத்தில் சிவந்தாள்!
ஆம்;
அவளவன்
"அவளின் பின் இருக்கையில்"
" தீண்டலை விட தூண்டல் இனிமை"

அவளின் பின்னிருக்கையில் அவன்.,
அவன் கொடுத்த காகிதம்
அவளின் கையில்,
முகம் சிவக்க அவள் அதை
படிக்க ஆரம்பித்தாள்!
அதில்,
"கவிதையாய் உன்னை
காதலிக்க ஆசையில்லை
கனவினால் உன்னை
களவாட ஆசையில்லை
முத்தத்தில் உன்னை
மூழ்கடிக்க ஆசையில்லை
தவிப்பாய் உன்னை
தீண்டும் ஆசையில்லை!
ஆனால்,
நித்தமும் உன்னோடு
வாழ மட்டும் ஆசை;
காதலாய் உன்னோடு
கல்லறையிலும் சேர ஆசை;
என்றும் காதலுடன்,
"ரதி"யின்" சக்தி"
என்று எழுதியிருந்தான்.
அந்த கடிதம் படித்த நிமிடம்,
அவள் கண்ணின் ஓரம்
நீர் கசிந்தது!
அவள் அக்கடிதத்தை ,
தன் மார்போடு அணைத்தவளாய்,
இருக்கையில் சாய்ந்தாள்!
ஆம்!
"அவன் கொடுத்த முதல் காதல் கடிதம்" அது!
அவள் மனம் முழுவதும் இன்று
அவனைப் பற்றிய நினைவுகள்
மட்டுமே!
பின்னிருக்கையில் அவன் இருப்பதையே
மறந்தவளாய்,
பேருந்தில் இருந்து இறங்கி
பள்ளியினுள் சென்றாள்!
""அவள் காதல் ராட்சசி என்றால்
இவன் காதல் ராட்சசனாய் அல்லவா
இருக்கிறான்! ""
© ❤நான் வாணி ❤