...

12 Reads

அல்லது செய்வார் அரும் பொருள் ஆக்கத்தை நல்லது செய்வார் நயப்பவோ?-ஒல் ஒலி நீர் பாய்வதே போலும் துறைவ! கேள்;-தீயன ஆவதே போன்று கெடும்.

213

ஒல்லென்று ஒலிக்கும் நீர் கற்பாறைமீது பாய்வதே போன்று விளங்கும் கடற்றுறையை உடையவனே! கேட்பாயாக தீச்செயல்களால் உண்டாகிய செல்வம் பெருகுவதேபோன்று தோற்றுவித்துத் தன்னெல்லையைக்கடந்து கெட்டுப்போகும் (ஆதலால்) தீவினை செய்வாரது அரிய பொருளாகிய ஈட்டத்தை

நல்வினையைச் செய்வார் விரும்புவரோ?

(விரும்புதலிலர்.)

கருத்து: நல்லோர், தீயது செய்வார் செல்வ நிலையாமையை அறிந்து அதனைப் பொருளாக மதித்தலிலராகலின், தீவினை செய்து பொருளீட்டலாகாது என்பதாம்.