...

14 Reads

படரும் பிறப்பிற்கு ஒன்று ஈயார், பொருளைத் தொடரும் தம் பற்றினால் வைத்து, இறப்பாரே,- அடரும், பொழுதின்கண், இட்டு, குடர் ஒழிய, மீ வேலி போக்குபவர்.

219

அடுத்து வருகின்ற பிறப்பிற்கு உதவும்படி ஒரு பொருளையும் கொடாராய் பிறவிகள் தோறும் தொடர்ந்து வருகின்ற தமது பற்றால் ஈதலுந் துய்த்தலுமுடைய பொருளை அதனால் தாமும் பிறரும் பயன் கொள்ளாதவாறு பயனின்றி வைத்துவிட்டு இறந்துபோவார்; அடரும் பொழுதின்கண் - பகைவர்களோடு போர் செய்யும் பொழுது குடர் சரிந்ததாக வேறொன்றினை உள்ளேயிட்டு மேலே கட்டுக்கட்டி வைத்திருப்பவரோடு ஒப்பர்.

கருத்து: அறிவிலார் பொருளால் தாமும் பிறரும் பயன் கொள்ளாதவாறு ஈட்டிவைத் திழப்பர்.