11 Reads
ஒற்கப்பட்டு ஆற்றார் உணர உரைத்தபின், நற் செய்கை செய்வார்போல் காட்டி, நசை அழுங்க,
வற்கென்ற செய்கை அதுவால்-அவ் வாயுறைப் புல் கழுத்தில் யாத்துவிடல்.
222
வறுமையா லொறுக்கப்பட்டு அதற்கு ஆற்றாதவர்களாய் (ஒருவரையடைந்து) அவர் மனதிற் பதியுமாறு உரைத்தவிடத்து அவர்க்கு நல்ல செய்கையைச் செய்வார் போன்று தோற்றி அதனான் அவர்கொண்ட விருப்பம் கெடுமாறு வலிய செய்கையைச் செய்தொழுகுமது வாயிடத்தில் இடுவதாகக் காட்டிய அந்தப் புற்களை பசுவின் கழுத்தில் கட்டிவிடுவதனோ டொக்கும்.
கருத்து: தம்பால் ஒன்று இரந்தாரைக் கொடுப்பதாகச் சொல்லி நீட்டித்து அலையவைத்தல் அடாத செய்கையாம்.