...

8 Reads

வழங்கார், வலி இலார், வாய்ச் சொல்லும் பொல்லார்,

உழந்து ஒருவர்க்கு உற்றால் உதவலும்

இல்லார்,

இழந்தது இல் செல்வம் பெறுதல்,-அதுவே பழஞ் செய் போர்பு ஈன்று விடல்.

221

(உணவிற்கு ஒன்று மின்மையால் பசியால் வருந்தி இரந்தார்க்கு) அவர்க்கு வேண்டிய உணவினைக் கொடாராய் கொடுக்கும் ஆற்றல் இலராதலின் சொல்லும் சொற்களாலும் தீயவர்களாய்

வருந்தியாகிலும் ஒருவர்க்கு ஓரிடர் வந்துற்ற ஞான்றை உதவிசெய்து அதனை நீக்குதலும் செய்யாதவராகிய இத்தன்மையர். இறந்தது இல் செல்வம் பெறுதலும்- கெடுதலில்லாத செல்வத்தைப் பெற்றிருத்தலும் நெடுநாட்களாக எரு முதலிய உரம் பெற்றுவந்த வயல் உரம் பெறாத இப்பொழுது போர் இடுமாறு கதிர்கள் விடுதலை யொக்கும்.

கருத்து: ஈதல், இனிய, கூறுதல், உதவி செய்தல் முதலியன இல்லாதவர்கள் செல்வம் பெற்றிருத்தல், முன்செய்த நல்வினையாலே யாம்.