18 Reads
பனிப்படர்ந்த
வேளையையும்..
அதை விட்டு அகலாத விழிகளையும்..
சூடு பறக்க தேய்க்கும் கரங்களையும்..
மெல்ல முணுமுணுக்கும் அதரங்களையும்..
சில்லென்ற குளிரை
தாங்கி கொள்ள
மனமிருந்தும்..
பாதங்கள்
பரதநாட்டியம்
ஆடுவதையும்..
என மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட..
இந்த பனித்துளிகளை உள்வாங்கிக் கொண்ட..
பூக்களை விட்டு
பிரிய மனமில்லாமல்
பிரியுது..
மனமும் ரசனையும்..
-கவிமலர் ராஜூ