...

12 Reads

முழவு ஒலி முந்நீர் முழுதுடன் ஆண்டார் விழவு ஊரில் கூத்தேபோல் வீழ்ந்து அவிதல்

கண்டும், 'இழவு' என்று ஒரு பொருள் ஈயாதான் செல்வம், அழகொடு கண்ணின் இழவு.

217

முழவு போன் றொலிக்கும் கடலாற்சூழப்பட்ட உலகமுழுதையும் ஆண்ட அரசர்கள் திருவிழா நடந்த ஊரில் ஆடிய கூத்தைப்போலப் பொலி வின்றி செல்வம் கெட்டொழிவதைப் பார்த்திருந்தும் நாமும்ஒருநாளில் இப் பொருளை இழந்து நிற்போம் என்று நினைத்து இரந்தவர்க்கு ஒருபொருளையும் கொடாதவனது செல்வம் வடிவும் அழகும் உடையா னொருவன் கண்ணிழந்து நிற்றலை யொக்கும்.

கருத்து:செல்வம் ஈகையின்றி விளங்குதலில்லை.