4 Reads
அந்த முகப்பரு நீர்க்குமிழி போல
உடையவே கூடாது
அப்படியே இருக்கட்டும் விட்டு விடு..
அதன் முதிர் சிவப்பு
குறையவே கூடாது முடிந்தால்
இன்னும் கொஞ்சம் சிவக்கட்டும்
விட்டு விடு..
நாளடைவில்
பனி முத்து போல் மறையவே கூடாது
அப்படியே இருக்கட்டும் விட்டு விடு..
உள்ளோடுங்கி விடட்டும்
என்று கிள்ளி விடாதே
அப்படியே இருக்கட்டும் விட்டு விடு...
எப்படிச் சொல்வது உன்
முகப்பருவின் அழகை
ரோஜா இதழ்களில் தோன்றிய
முள்போல அப்படி அழகாக இருக்கிறது...