...

7 Reads

விரும்பி அடைந்தார்க்கும், சுற்றத்தவர்க்கும், வருந்தும் பசி களையார், வம்பர்க்கு உதவல்,- இரும் பணை வில் வென்ற புருவத்தாய்!- ஆற்றக்

கரும் பனை அன்னது உடைத்து.

220

பெரிய மூங்கிலாகிய வில்லினைத் தனது வடிவத்தால் வென்ற புருவத்தினையுடையாய் உணவிற்கு ஒன்றுமின்மையால் வருந்தி அறிமுகமுண்மையால் தன்னை விரும்பி வந்து அடைந்தவர்களுக்கும் தம் உறவினர்க்கும் அவர்களை வருத்துகின்ற பசியினை நீக்காராகி புதிய அயலார்க்கு உதவி செய்தல் மிகவும் (தன்னைப் பாதுகாத்து ஓம்பினார்க்குப் பயன்படாது நெடுங்காலஞ் சென்று பிறர்க்குப் பயன்படும்) கரிய பனைபோலும் தன்மையை உடையது.

கருத்து: அறிவிலார் தமர் பசித்திருப்பப் பிறர்க்கீவர் இஃது அடாது என்பதாம். 'வருத்தும்' என்பது 'வருந்தும்' என எதுகை நோக்கி மெலிந்து நின்றது.