...

12 Reads

கடம் கொண்ட ஒண் பொருளைக் கைவிட்டு

இருப்பார்

இடம் கொண்டு, 'தம்மினே' என்றால்,

தொடங்கிப்

பகை மேற்கொண்டார் போல, கொண்டார் வெகுடல்,

212

நகை மேலும் கைப்பாய் விடும்.

தாம் கடனாகக்கொண்ட ஒள்ளிய பொருளை பிறரிடம் தம் கையினின்றும் விட்டிருப்பார் அவரிடத்திற்சென்று எம்மிடம் கொண்ட பொருளைத் தரவேண்டுமென்று கேட்டால் தம்மோடு பகையினை மேற்கொண்டவரைப்போலத் தொடங்கி கடன் வாங்கியவர் சினத்தல் விளையாட்டாகச்

செய்தவிடத்தும் மனதிற்குக் கசப்பாய்விடும்.

கருத்து: கொடுப்பதாகக் குறித்த காலத்தில்

தாங்கொண்ட பொருளைக் கொடாராயின் கடன்கொண்ட ஒண்பொருளை உடையார்க்கு மனக்கசப்பை உண்டாக்கும்.