...

5 views

புன்னகை வரம்

பிறந்த நொடிகளில் குழந்தை முகம் காணும் புன்னகை தாய்க்கு அன்பின் வரம்
தன் குழந்தையை முதன் முதலில் கைகளில் ஏந்தும் தருணம் அப்பாவின் விழியோர கண்ணீருடனான ஆனந்த சிரிப்பு வரம்
புன்னகை தேடும் பயணங்களில் நட்பாளருடன் பள்ளிகளில் சிரித்து கொண்டாடிய தருணங்கள் அவ் வயதுகளின் வரம்

பள்ளி ஆசிரியர்களின் கேலிக்கை கதைகளை கேட்டு சிரித்திடும் தருணங்கள் வரம்....

பருவ வயதுகளில் ஆண் பெண் நட்புக்களின் புரிதல்களில் வெட்கம் கொண்ட புன்னகை வரம்.....
பட்டங்கள் பாராட்டுக்களை பெற்றிடும் போது தாய் முகத்து புன்னகை பெரு வரம்.....

தூர தேச உறவினரை கண்ட நொடிகளில் முகமலர்ச்சியுடனான புன்னகை வரம்...

நம் வாழ்வியல் வைபவங்களில் நாம்
காணும் ஒவ்வொரு மனிதர்களினதும் தன்னலமற்ற புன்னகை வரம்....

மூப்படைந்த போதினிலும் பொக்கை வாய்ச் சிரிப்புடனான பாட்டி தாத்தாவின் பழைய கதைகள் அனைத்தும் வாழ்வியலின் வரம்


பதற்ற கலக்கத்தில் நகரும் நபர்களிடையே சந்திப்புக்களில்
சிரிப்பை விதிப்பவர்களின் புன்னகை வரம்.....

யாரோ முகம் அறியா நபர்களிடை
எதிர்பாரா உதவிகளில் புன்னகைத்து நன்றி கூறும் தருணங்களில் புன்னகை பெரு வரம்....

சுமந்து செல்லும் சோகங்கள் அனைத்தும் புன்னகை பூத்திடும் சந்திப்புக்களில் சிட்டாய் பறந்திடும்
தருணங்களில் புன்னகை வரம்...

பேசிப் பழகா நபர்களிடை புரிந்துணர்வுடனான
வார்த்தைகளற்ற மொழியாகி போகையில் புன்னகை அன்பின் வரம்.........

ஓர் நாளின் முடிவில் அந்நாளின்
நல்ல நினைவுகளை மீட்டுகையில்
தோன்றிடும் நம்மையறியாத பூரிப்பு அந்நாளின் திருப்திக்கான வரம்......

ஒவ்வொரு கால நகர்வுகளிலும் புன்னகை வரம் ......
புன்னகைக்கும் மனிதர்களும் வரம்.....
மனதின் பிரதிகளே நம் புன்னகை
புன்னகை பூக்கும் முகங்களே
நம் நேர்மறை சிந்தனைகளை ஆற்றுப்படுத்த வல்லன......
© kavi kavya