...

3 views

தாய்மொழி

கொக்கரிக்கவில்லை கோழி
கூவவில்லை சேவல்
ஓடவில்லை ஆறு
ஓடையில் இல்லை நீரு
இதை அழித்தது யாரு
கொஞ்சம் எண்ணி நீயும் பாரு

பாரம்பரியம் கட்டிக்காத்தது அந்தக்காலம்
பாரும் போற்றியது சங்க காலம்
பாவங்கள் தொடருது கலிகாலம்
பாழாய்ப் போகுமா தற்காலம்

எல்லாம் தொலைஞ்சுப் போகுமா?
என் தாய்மொழியும் பண்பாடும் மறையுமா?
செயற்கை அரிதாரம் பூசுமா!
இயற்கை தன்னிலை இழக்குமா?

கொக்கரிக்கவில்லை கோழி
கூவவில்லை சேவல்
ஓடவில்லை ஆறு
ஓடையில் இல்லை நீரு
இதை அழித்தது யாரு
கொஞ்சம் எண்ணி நீயும் பாரு

என் பிள்ளை என் பெயர் சொல்லும்மா
எந்தாய்நாட்டில் தாய்மொழி தழைக்குமா?

தாய்க்கு இணையான தெய்வமில்ல
தாய்மொழிக்கு ஈடான மொழியுமில்ல
உடைமை போனால் பரவாயில்ல
உன் தாய்மொழி அழிந்தால்
வாழ வழியேயில்ல

அன்னை தந்தையின் அன்பால் பிறந்தோம்
அன்னைத் தமிழால் அழகாய்
வளர்ந்தோம்
அறுசுவையை உண்டு மகிழ்ந்தோம்
அறத்தைத் தினமும் போற்றிப் புகழ்ந்தோம்
உறவு சூழக் கூடி வாழ்ந்தோம்
உண்மைக்காக உயிரை இழந்தோம்
இன்று சுயநலத்திற்காக உண்மையைக் கொன்றோம்

கொக்கரிக்கவில்லை கோழி
கூவவில்லை சேவல்
ஓடவில்லை ஆறு
ஓடையில் இல்லை நீரு
இதை அழித்தது யாரு
கொஞ்சம் எண்ணி நீயும் பாரு
© சரவிபி ரோசிசந்திரா