...

4 views

வெற்றி உனதாகும்
எழுந்து வா
துணிந்து வா
எதையும் முடிப்போம்
சரித்திரம் படைப்போம்

நகராதக் கல் கூட
நம்பிக்கையில் இருக்குது
அதனால் தான்
அலை வந்து அடித்தாலும்
அப்படியே நிற்குது

திறன் கொண்ட
மனிதன் நீ
திகைத்திடல் ஆகுமா
திசை எட்டும்
உன் பெயர்
ஒலித்திட வேண்டாமா

புல்லும் புழுவும்
தடம்பதிக்கும் போது
சாதிக்க பிறந்த நீ
சாய்ந்திடல் சரி தானா

நம்பிக்கையோடு
முன்னோறு
வெற்றி உனதாகும்

ஆரூர் பூ மோகன்