...

2 views

வாழ்நாள் ஆசை
வாழ்நாள் ஆசை....

ஒருநாளேனும் அந்த
ஐஸ்கிரீம் கடையின்
படி தாண்டி உள்ளே சென்று
பனிக்கூழ் உண்டிட வேண்டும்....

ஒருநாளேனும் கீர்த்தி டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோரின்
படி தாண்டி உள்ளே சென்று
அம்மாவுக்கு வேண்டிய பொருள்களை எல்லாம் வாங்கி வர வேண்டும்

ஒரு நாளேனும் அழகு நிலையத்தின் படி தாண்டி உள்ளே சென்று
முடி திருத்திக் கொள்ள வேண்டும்

ஒருநாளேனும் அந்த நான்கு வழிச் சாலையை நான் மட்டும் தனியாய்க் கடக்க வேண்டும்...

ஒருநாளேனும் அந்த பேன்சி ஸ்டோரின் படி தாண்டிச் சென்று வகை வகையாய் கைச் சங்கிலி வாங்கிக் கொள்ள வேண்டும்

ஒருநாளேனும் அந்தப் பேருந்தின்
படி ஏறி கூட்ட நெரிசலில் நசுங்கி நான் அமர்ந்திருக்கும் இருக்கையை அங்கே களைத்து நிற்கும் முதியவருக்கு விட வேண்டும்

ஒருநாளேனும் அந்தத்
துணிக் கடையின்
படி ஏறி எல்லாத் துணிகளையும்
பார்த்துப் பார்த்து துணி வாங்க வேண்டும்....

ஒருநாளேனும் ஒரு புத்தகக் கடையின்...