...

8 views

பூமித்தாய்🌍❣️
மனிதா!!

அனைத்து உயிர்களும்
உருவாக காரணமானேன்,
என் கருவில் பலவித
மரங்கள் செழித்து வளர்கிறது
எல்லாம் உனக்காக தான்
உனக்கு உயிர்மூச்சும்
நிழலும் தரதான் !

மழையை கொடையாக தந்தேன்
தண்ணீர் , உணவு வேண்டுமே
நீ உயிர்வாழ !

நீ நலமாக உறங்க வேண்டுமே
அதற்காக
உன் வசிப்பிடத்தையும்
தாங்கி நிற்கிறேன்!

நிலம் நீர் காற்று தீ ஆகாயம்
இந்த ஐம்பூதங்களையும்
தாங்கி நிற்கிறேன்
நீ நலமுடன் வாழ!!

ஆனால் பதிலுக்கு நீ :
நான் சுமக்கும் காணி
ஆறு கடல் குளம்
எல்லாவற்றிலும் குப்பையை கொட்டினாய்,
கடலில் எண்ணெய்யை கொட்டுகிறாய்,
கடல் கருவறையில் வாழும்
மீன்கள் மடிகிறது;
நிலத்தையும் மாசு செய்கிறாய்;
என் கருவறையை
பிளந்து எரிபொருள் எடுக்கிறாய்;
என் மடி மீது வளரும் மரங்களை முளையிலேயே கிள்ளுகிறாய்!

அதனால் தான் இன்று
பூமியதிர்ச்சி சுனாமி
என்று உன்னை தண்டிக்கிறேன்,
ஓகி நிவர் கஜா புரவி
இவை உன்னை அழிக்க அல்ல
உன்னை திருத்த ,
அடித்து சாகும் மனித இனத்தின்
ஒற்றுமையை நிலைநாட்ட!!

மனிதா!
உன்னை வாழ வைக்கும்
என்னை வாழவிடு,
உன் தலைமுறை நலமாய் வாழும்!
என்று கண்ணீருடன்
கூறினாளாம் பூமித்தாய்!!!!

-(கண்ணம்மா)
#savearth #earthday #writco #writcoapp
© All Rights Reserved