...

9 views

ஏமாற்றம் என்னும் அவள்...
ஏமாற்றம் என்னும் அவள்..

ஆசையவள் கருவறையில்
அசைந்தாடும் மழலை அவள்...

அன்பென்னும் விரல்களிலே
அழகிய மருதாணி அவள்...

வெறுத்தே நாம் சென்றாலும்
விரும்பிடும்‌ ஒரு காதல் அவள்...

விரட்டிவிட நினைத்தாலும்
விலகித்தான் சென்றாலும்

விட்டுவிட்டுச் செல்லாத
விசித்திரப் பெண் அரக்கி அவள்...

ஆசை என்னும் போதையிலே
ஆழ்ந்து நாமும்‌ கிடக்கையிலே

நீர் தெளித்து நிமிர வைக்கும்
நிதர்சனப் பூம்பாவை அவள்...