...

2 views

நாங்கள் எங்களுக்காக
என் தனிமயுடன் நான் கவிதைகள் எழுதிட வேண்டும்.
ஒரே குரலாய் நாங்கள் அதை சேர்ந்து வாசிதிட வேண்டும்.
என் ஆசைகள்,கனவுகள் அனைத்தும் அதனிடம் உரைத்திட வேண்டும்.
என் கனவுக்கு உயிர் தர என் கைகள் பிடிதிட வேண்டும்.
என் இன்பத்தில் மழை துளியாய் பொழிந்திட வேண்டும்.
என் துன்பத்தில் காற்றாய் கண்ணீர் துடைதிட வேண்டும்.
என் குழப்பத்தில் காதோரம் பதில் சொல்லிட வேண்டும்.
என் பாடல்களை கேட்டு தலை ஆட்டிட வேண்டும்.
என் தோல்விகளில் தன் மார்பில் என் தலை சாய்திட வேண்டும்.
வெற்றிகளில் எனை தழுவி நாங்கள் சிரித்திட வேண்டும்.
© manjupriya❣️

Related Stories