...

10 views

கருவறை
எங்கு தவறு இழைத்தேன்
என்று தான் நிதமும்
குமுறுகிறேன்……

ஆண் பெண் பேதமின்றி
வளர்ந்திடத்தானோ
கருவறை கூட
இருட்டறையாக உள்ளது….

உள்ளிருப்பது ஆணா
பெண்ணா என்ற
பேதம் தெரியாமல்
தான் சுமக்கிறாள் பெண்….

தெரிந்தால் முன்னமே
அழித்திடுவாய் என்று தான்
இருட்டறையில் வைத்து
பிறக்கும் வரை தெரியாமல்
உயிர் வளர்த்திட்டானோ
அந்த ஆண்டவன்….

ஆனால் அதையும் தாண்டி
முன்னேற்றம் என்ற பெயரில்
அதையும் மூன்று மாதத்தில்
அறிந்து கொண்டு இயற்கைக்கு
மாறாக பெண் என்றால்
மட்டும் அழித்திட அலையும்
கூட்டத்தை என்னென்று சொல்ல….

எப்போது இங்கு வந்தது
இந்த பேதம்… பிளவு…..

இருவரையும் ஒரே
கருவில் தான்….
அதே பத்து மாதம்
தான் சுமக்கிறாள்
ஒரு பெண்…..

உருவாவதில்….
சுமப்பதில்….
அன்பை பொழிவதில்…
அக்கறை காட்டி
வளர்ப்பதில் என
எந்த பேதமும்
பார்பதில்லை
தாயவள்….

இருந்தும் இந்த
விடையரியா பிளவு
வந்தது எவ்விதம்….

வளர்ப்பிலா….
பிறப்பிலா….
எங்கு வந்தது
இந்த பேதம்….

தன் உதிரம் தந்து
உயிர் தந்து…
பல வலிகள் தாங்கி
பத்து மாதம் சுமந்து
பெற்றவள் உன்னிடம்
யாசிப்பதும்…. வேண்டுவது
ஒன்றே ஒன்று தான்….

தன் போன்ற
ஒரு பெண்ணை…
சக மனுஷியாய்
ஏற்றுக் கொண்டு
மரியாதை செய்வது
மட்டுமே…

பிறக்கும் போதே
பெண் என்றால்
ஒரு ஆயாசம்
வருவதுவும் ஏனோ…..

சுமப்பதும் பெண்…
வலி சுமந்து
பிரசவிப்பதும் பெண்….
பாலூட்டி தாலாட்டி
வளர்ப்பதும் பெண்….
எனில் பெண் என்றால்
ஏனிந்த பேதம்…..

பேதம் பார்த்து ஒரு
பெண்ணை இழிவு
செய்யும் போது எல்லாம்
உனை சுமந்த கருவறை
காந்திப்பொகிறது….

நீ பெண்ணை மதித்து
போற்றும் போது எல்லாம்
குளிர்கிறது உனை
சுமந்த கருவறை……

உனை சுமந்தவளை
போற்றுவதும்
பெருமைப்பட
வைப்பதும்
உன் கையில் தான்…….

வாழ்வின் ஒவ்வொரு
கட்டத்திலும் நம்மை
சுமந்து கொண்டாடி
வழிநடத்தும் உற்ற
துணையாய் உடன்
வலம் வரும்
பெண்மையை
போற்றுவோம்…❤️🙏

Related Stories