...

4 views

உயிர்போடு உயிர்த்தெழும்
மாற்றம் மனிதர் வாழ்வில் மட்டுமே பருவம்
மாறும் சூழல்
காலமும் மரங்களின் வாழ்வியலும் உணர்த்துவதும் இதுவே
மரங்களின் தலையில் வேர்விட்ட கிளைகளும் மத்தியில் நெருக்கமான மயிரிலைகள் மகுடம் மாண்பும்
பதவிசாய் பதுங்கும் புள்ளினங்களின் தாய் வீடு உறவுகளுடன் ஊடல் இல்லா பசுமையான தளிர்களும் நச நச பொழியும் பனி நடுநிசி வேளையில் மெல்ல கதைக்கும் உரையாடல் கிளைகளும் கூடிடும் வேலை கூடல் மொழியில் உளறல் கூதல் குறுக்கிடும் தருணம் குறையாத குளிர் காலமும் வருவதாலோ மரங்களும் வறண்டு வாடி வதங்கி தன் பொலிவை இழக்கும் ஈரமற்ற பழுப்பு நிறம் எய்தி எவ்வித பேச்சின்றி உயிர் விடும் சில விடுபடா உயிர்களும் தன் ஆயுள் முடியும் முன் தன் தாயின் நலனில் அக்கறை கொண்டு தன்னை உயிர் மாய்த்துக்கொள்ளும் அன்பும் அவைகளே அருக அருகே நித்தம் நீங்கா நீளும் செல்ல சண்டைகள் சிநேகிதிகள் விழியும் கீழே விழுந்து தங்களை பார்க்கும் ஒரு மரகத பாவையும் இன்று நான் நாளை நீங்கள் என்று தத்துவம் உரைக்கும்
உண்மையாக உயிருடன் அவர்கள் இந்த மண்ணுக்குள் உரமாகி மீண்டும் உயிர்தெழும் காலத்திற்காக காத்திருக்கிறது
உதிர்ந்த இலை சருகுகள்
உதிராத இலைகளும் சத்தியம் மொழிகிறது
மனிதனின் வாழ்வியல் தெள்ள தெளிவாய் உரை க்கிறது அவை இவையெல்லாம்
இயற்கை
வணக்கம் 🌼🙏
அநபாயன் 🤍

© Ash(ஈசன் )