...

6 views

நிழல்காண் மண்டிலம்
அவனை ஈர்க்கும் வண்ணம்
வேண்டுமென்றே
செய்யப்பட்டுள்ள _
என் உடை அலங்காரமும்
கூந்தல் அலங்காரமும்
சரியாகத்தான் இருப்பதாக
தட்டொளி சொல்கிறது

பின்முதுகுப்பரப்பில்
பின்கழுத்தில்
விரலாலும் நாவாலும்
கோலமிட வரும்
என் கோமகனை
நான் கண்டும் காணாதது போல்
நடிக்க ஏதுவாக_
தோதாகக் காட்டிக்கொடுத்து விடு
என் நிழல்காண் மண்டிலமே

© iAmRangz