கானகத்தில் கா-த-ல்
நானே உந்தன் இரு கண்கள்
உன்னுடைய சூரியனும் சந்திரனும்
நானே!
உன்னுடைய இரவு பகல் நானே!
உந்தன் காலை பொழுது என்னில் தொடங்கி
உந்தன் இரவாகி என்னிலே முடியும்!
நேரம் ஒன்றை காலனிடம் இருந்து
பறித்து
நேர்த்தியாக உன்னுடன் என் நேரம் இருக்கும்
நீ வயிற்றில் சுமக்கும் பிள்ளை பத்து திங்கள்
நான் நெஞ்சில் சுமக்கும் பிள்ளை நீயானால் என் வாழ்நாள் திங்கள் நீளும்
என்னைவிட்டு நீ நீங்கும் பொழுதெல்லாம்
நீளாமல் தீட்டாகி போகிறது காலம்
இந்த தீட்டானவனின் மீது உன் சுவாசம் பட்டால் தீயாகின்றேன் அடுத்த நொடியே
உந்தன் சுவாசம் என்னை காட்டில்
இழுக்கும் நந்த வன கானமாகிறது
நடு கானகத்தில் நாதி இன்றி நால் புறமும் எந்தன் தேடல்
எங்கும் உந்தன் கீதம் கேட்க
எங்கும் உந்தன் காவியம் .....
© குந்தவை