...

3 views

இனிமேல்....
எனக்காக இரங்குபவர்களே....
போதும் உங்கள் கழிவிரக்கத்தின் பலனாக
நான் பெற்ற பலனெல்லாம்

இனியொருவரும் என்னை
இரங்கி இரங்கிப் பார்க்காதீர்கள்.....
அது ஒன்றுக்கும் உதவாத குப்பை....

இனி எனக்கு உதவ நினைத்தால்
என்னைப் பெருங்கோபத்தோடும்
பெரிய விமர்சனத்தோடும் அணுகுங்கள்...
இதுவே நீங்கள் எனக்குத் தரும் அன்பாகவும்
இருக்கும்....

உங்களின் ஐயோ பாவத்தைத்
தூக்கித் தூர வையுங்கள்.....
அது என்னை வீட்டின் மூலையில்
அமர்த்திவிட்டது...!

என் மீது உங்கள் இரங்கற்பா
வாசிப்பதை இனியேனும் நிறுத்துங்கள்
விழித்துக் கொண்டேன் நான்....

என் பாரத்தை என்னால் ...