...

7 views

இயற்கை🌿🍃
விடிய காலை சேவல் கூவ எழுந்த உலகம் இன்றோ கைபேசியின் எச்சரிக்கை மணியை கொண்டு எழுகிறது....
எறும்பு சேமிக்க அரிசி மாவினால் போட்ட கோலம் இன்றோ நேரம் சேமிக்க ஒட்டி செல்கிறது...
நிழலாக மரம் இருந்த இடத்தில் இன்றோ நிழல்குடை நிற்கிறது...
குன்றுகள் மீது கோயில் இருந்த இடத்தில் இன்றோ குன்றுகளை நீக்கி தொழிற்சாலை இருக்கிறது...
பறவைகள் அருந்தி செல்ல குளம் இருந்த இடத்தில் இன்றோ அடுக்கு மாடி கட்டி பாத்திரத்தில் நீர் வைக்கிறது...
© lavanya lavanya