...

8 views

மன்னிக்க மாட்டாயா?
மன்னிக்கமாட்டாயா?



சிறு சண்டையில் பேசாமல் இருந்த தோழிக்கு நான் எழுதியது.




உன் மவுனத்தை நான்
யாசிக்கவில்லை..

என் பாசத்தை நீ
நேசிக்கவில்லை..

உன் கோபம் இங்கு
தித்திக்கவில்லை..

என் தவறை நீ
மன்னிக்கவில்லை...

புத்தனோ இதை
போதிக்கவில்லை...

தவறு செய்யுமுன்
சிந்திக்கவில்லை

என் துயரம் உன்னை
நிந்திக்கவில்லை


உன் மவுனமே என்
துயரின் எல்லை...


- அப்துல் ஹலீம்


© Dr. Abdul Halim