...

6 views

மலர்கள் பேசினால்
மலர்கள் பேசினால்
இத்தனை நாட்கள் நான் எங்கே இருந்தேன் எப்படி மறந்தேன்
அவளின் சிரிப்பும் அவளின் மொழியும்
இத்தனை அழகை அவளின் மயக்கத்தில் திளைத்து இருக்க மலர் போல் அவள் சிரிப்பை மறந்தேன்
என்னை கடந்து காதலில் ரசிக்க,
புது வித மாயை இதுவோ தினமும் காலை அவள் சிரிப்பில் இரவின் நிலவில் அவள் இதழ் சாயத்தின் விளிம்பில் நிலவின் அழகினை கண்டு அருகில் இருக்கும் அவள் மலர் கரங்கள் பிடித்து இருப்பதை மறந்தேன்!
மொத்தமாய் மறந்தேன்
அவள் பேசுகிறாளா இல்லை மலர் கூடமே பேசுகிறதா என!
சுற்றி அத்தன்னை தேனிக்கள் இவள் இதழ் தேடி!
நித்தம் போர் தான் மலர் எனக்கா அவர்களுக்கா!
இது தான் காதலோ எழுத மனம் துடிக்க ❤️ ஏனோ வார்த்தைகள். மறந்து நிற்கிறேன்!
இந்த காலை வேலை அவளால் காதல் வேலையானதே ❤️
© அருள்மொழி வேந்தன்