...

6 views

வானவில் மாயம்
வாழ்க்கைப் பயணத்தில்
நிறைய வானவில்
பார்க்கிறேன்..
வண்ண வண்ணமாக
அல்ல..
மறையும் வானவில்லாக..
வாழ ஆசை காட்டும்
நிலையில்லா
அழகிய தருணங்கள்
மாயமாகும்போது
வானவில் மாயமாய்
உணரும் மனம்..
வங்கிக் கணக்கில்
மாத ஊதியம்
சேர்ந்தால்
வானவில்லாய் மகிழ்ச்சி!
வாங்க வேண்டியதும்
கொடுக்க வேண்டியதும்
முடிந்தபின் மாயமானது
மனதிற்கு அதிர்ச்சி!
இளமைக் கொண்டாட்டம்
ஒரு வானவில் அழகு!
குழந்தை பெற்றால்
குடும்பமே கொண்டாடும்
இன்பம் மெல்ல மெல்ல
மாயமாகும் வானவில்லாய்!
வளர்ந்த பிறகு
குழந்தைக்கு மாயமாகும்
வானவில் வாழ்க்கை.
நிலையில்லா இவ்வுலக
வாழ்வில் நிலையானது
நினைவுகள் மட்டுமே!
வாழும்போது மறைந்த
தருணங்கள்
வானவில் மாயமாய்
நினைவில் நிலைத்திருக்கும்.
© யாமினி மழையினி