
8 views
கனவா... நிஜமா...
கனவா... நிஜமா...
எந்தன் பிம்பமாக
எனையாள வந்தது
கனவா.... நிஜமா...
இமை மூடி
திறக்கும் முன்பே எந்தன்
இடைவளைத்தது
கனவா... நிஜமா...
வஞ்சியெனை
நெஞ்சோடணைத்து
வாஞ்சையாக பார்த்தது
கனவா... நிஜமா...
துள்ளிச் செல்லும்
கள்ளியெனை
அள்ளியெடுத்தது
கனவா... நிஜமா...
உந்தன்
கருவிழிதனிலே
இந்த
காரிகையை கண்டது
கனவா... நிஜமா...
வளிக்கும்
இடைவெளியின்றி
எனை
வசியப்படுத்தியது
கனவா... நிஜமா...
கள்வனின்
கைப்பிடிக்குள்
கைப்பாவை போலே
கட்டுண்டது
கனவா... நிஜமா...
மங்கையெந்தன்
அங்கமெங்கும்
அதரம்பதித்தது
கனவா... நிஜமா...
மூச்சுக்காற்றின்
ஸ்பரிசம் தனிலே
எனை
மூர்ச்சையாக்கியது
கனவா... நிஜமா...
கார்குழல்தனை
ஐவிரல் கோதி
நெற்றிப்பொட்டில்
அதரம்பதித்தது
கனவா... நிஜமா...
விழியோடு
விழிநோக்க இயலாது
சிந்திய வெட்கத்தை
பொறுக்கி எடுத்தது
கனவா... நிஜமா...
உயிரற்ற மனதினை
உணர்ச்சிபிழம்பாய்
மாற்றியது
கனவா... நிஜமா...
நானறியேன்
கள்வனே...
© கவி
எந்தன் பிம்பமாக
எனையாள வந்தது
கனவா.... நிஜமா...
இமை மூடி
திறக்கும் முன்பே எந்தன்
இடைவளைத்தது
கனவா... நிஜமா...
வஞ்சியெனை
நெஞ்சோடணைத்து
வாஞ்சையாக பார்த்தது
கனவா... நிஜமா...
துள்ளிச் செல்லும்
கள்ளியெனை
அள்ளியெடுத்தது
கனவா... நிஜமா...
உந்தன்
கருவிழிதனிலே
இந்த
காரிகையை கண்டது
கனவா... நிஜமா...
வளிக்கும்
இடைவெளியின்றி
எனை
வசியப்படுத்தியது
கனவா... நிஜமா...
கள்வனின்
கைப்பிடிக்குள்
கைப்பாவை போலே
கட்டுண்டது
கனவா... நிஜமா...
மங்கையெந்தன்
அங்கமெங்கும்
அதரம்பதித்தது
கனவா... நிஜமா...
மூச்சுக்காற்றின்
ஸ்பரிசம் தனிலே
எனை
மூர்ச்சையாக்கியது
கனவா... நிஜமா...
கார்குழல்தனை
ஐவிரல் கோதி
நெற்றிப்பொட்டில்
அதரம்பதித்தது
கனவா... நிஜமா...
விழியோடு
விழிநோக்க இயலாது
சிந்திய வெட்கத்தை
பொறுக்கி எடுத்தது
கனவா... நிஜமா...
உயிரற்ற மனதினை
உணர்ச்சிபிழம்பாய்
மாற்றியது
கனவா... நிஜமா...
நானறியேன்
கள்வனே...
© கவி
Related Stories
7 Likes
2
Comments
7 Likes
2
Comments