...

8 views

எதார்த்த மொழி!
எதார்த்த மொழி!

கடைத்தெருவில்
தாயவளிடம் பொம்மை
ஒன்று கேட்க...
வரும் தேர்வில் நீ
முதல் மதிப்பெண்
எடுப்பதற்கு பரிசாக தருகிறேன்
என்று சொல்ல ....
தாயவளின் எதார்த்த மொழி
அவளின் தரத்தின் மொழியாகி
பரிசுபெற்றது!

மிதிவண்டி ஓட்ட கற்கையில
காயங்கள் ஆறுபட...
ஆறுதலாய் தந்தை சொன்னவை
காயங்கள் மறைந்திடும்
கற்றுக்கொள்பவை மறையாது !
தந்தையவன் எதார்த்த மொழி
நிகழ்காலத்தை பயணிக்க
கற்றுக்கொடுத்த மொழி!

வகுப்பாசிரியர்
ஒவ்வொருவரையும்
உன் அப்பாவிற்கு
நீ என்ன கொடுப்பாய்
என கேட்க...
அவரிடத்தில் நான்
இதை கேட்க
நீங்கள் என்ன கொடுத்தீர்கள் ?
"நான் கொடுத்தது
கணக்கு வாத்தியார் அப்பா இவரு"
ஆசிரியரின் எதார்த்த மொழி !
எதிர்காலத்தை செதுக்கும் மொழி !


எதார்த்த மொழி!
தரத்தை உயர்த்தும் மொழி
நாம் பார்க்கும் பார்வையில்!

#தமிழ்வரிகள் #writcopost
© Nuradhaag