...

5 views

ஆண்கள் தின வாழ்த்துக்கள்
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள்..

தனக்கு என்று எதையும்
வாங்காது பிறருக்கு அளித்தே
மகிழும் பண்பு,
செய்யும் தொழிலே தெய்வம்
என்ற கொள்கையோடு,
உழைப்பிலே பயணம் செய்து,
களைப்பை வெளியே காட்டாமல்
இளைப்பாறும் நேரம் கூட
அடுத்து என்ன செய்வது என்ற
கேள்விகளுக்கு விடை தேடி,
பணியுடனே பிரயாணம் என்று
தனி மனித சுதந்திரத்தை இழந்து,
ஓய்வெடுக்கும் காலம் வரை
தேர்ந்தெடுத்த பணிகளை
தக்க வைத்து, தேடி வரும்
மாற்று கருத்துகளுக்கு பதிலளித்து
காற்று போல் பல திசைகளிலும்
பம்பரமாக சுழன்று வரும்
ஆண்களுக்கு இனிய
சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள்.
© KaviSnehidan