...

8 views

கயல்!
ஒத்தி வைக்க
முயல்கிறேன்
நாளை என்ற
வார்த்தை முதல்
நடக்குமா என்ற
கேள்வி வரை...
சிதறும் மணிகளை
சேர்த்து கோர்க்க
முடியுமாயின்
வாழ்க்கை
வலுத் தேடுமோ...
சேர்த்தவற்றை எல்லாம்
நகர்த்திச் செல்ல!
கடப்பதே கடமையானால்
காத்திருந்த காலங்கள்
கற்பனை தானோ!
விழியதனில் வழியும்
வெண்ணீரும் கரைக்
கடங்காமல் தலையனை
வரை கமழுதே...
நித்தம் துயிலற்ற
கயலென நான்!
நீந்தி களைகிறேன்
அந்த தருணங்களை
தேடி...
ஒற்றை தொட்டிக்குள்!!
_ சீதளா செ🌺 @meowkutty
#peom #kavidhai #kavidhaisitharal #tamil #kadhal #time #love #writings #penn #girlslove
© சீதளா செ