...

9 views

குற்றங்களின் மீள்பார்வை
பிறரின் குற்றங்களை
பதிவேட்டில் குறிக்கும் அவன்..
பெயர்களில் நம்பிக்கையின்றி
செய்திகளுடன் அலைகிறான்.

பல தொகுப்புகள் கொண்ட
அவனது அலமாரியில்
செம்பழுப்பு காகிதங்கள்.

காற்றாடும் பொழுதுகளில்

அவ்வப்போது அதிலிருந்து
மனிதர்கள் பக்கம் கிழித்து
உதிர்வதுண்டு குற்றங்களற்று.

கோப்புகளில் அவன்
பேனா மசி
ரணங்கள் மீதூறும் புழுவென
அலைகிறது
தண்டனைகள் கூறும் தீர்ப்புடன்.

வார்த்தைகளை விரட்டியபடி
கிளைக்கு கிளை தாவும்
மந்தியின் கையில் இருக்கிறது
அவனின் இன்னொரு பதிவு.



© sparisan