...

6 views

இயற்கை🌿🍃
கிளைகளிடையே தோன்றும் காதல் காற்றாய் தான் மாறிப் போகும்...
அலைகளிடையே தோன்றும் காதல் நுரையாய் தான் மாறிப் போகும்...
மழைத்துளிடையே தோன்றும் காதல் கடலாய் தான் மாறிப் போகும்...
மேகங்களிடையே தோன்றும் காதல் மின்னலாய் தான் மாறிப் போகும்...
மலைகளிடையே தோன்றும் காதல்
எதிரொலியாய் தான் மாறிப் போகும்...
காற்றிடையே தோன்றும் காதல்
புயலாய் தான் மாறிப் போகும்...
கனலிடையே தோன்றும் காதல் சாம்பலாய் மாறிப் போகும்...
ஆனால்
உயிர்களிடையே தோன்றும் காதல் உயிராய் தான் மீண்டும் தோன்றும்...

© lavanya lavanya