...

1 views

அகழாய்வு
கீழடி மண்ணைக் கிளறினோம்
தொன்மை உலகிற்கு அறிவித்தோம்
தோண்ட தோண்ட நாகரீகம்
வைகையில் வைரமாய் மிளிர்கிறது
மூதாதையர் வாழ்ந்த வாழ்க்கையை
அகழ்வாராய்ச்சியில் மூழ்கி முத்தெடுத்தோம்
தேசத்தின் சிறப்பைச் சூளுரைத்தோம்
செங்கற் சுவரில்
செழித்த கட்டிடங்கள்
செழுமையான நம் பாரம்பரியங்கள்
கூரைஓடு மண்பாண்டங்கள்
கூட்டுக்குடும்ப வாழ்கையின் அச்சாரங்கள்
எலும்பு கருவி கிடைத்துள்ளது
கண்டுபிடிப்பின் காப்பியம் எடுத்தியம்புகிறது
எழுத்தறிவு சிறப்பை
மண்பாண்டம் பறைசாற்றுகிறது
உண்மை உரைக்கல் என்பதை
கீழடி உலகிற்கு உரைக்கிறது
நம் தேசத்தின் மாண்பை
பிற தேசம் வியக்க வைக்கிறது...