...

2 views

ஒர் நாள்
#BloomingFables
ஏதுமற்ற வெறுமைகளால் சூழப்பட்ட
ஒர் நாள் ......

இயல்பாகத் துடிப்பதற்கு மறுத்து
என் இதயம்
அந்த நாளினையே முழுதாக
ஸ்தம்பிக்க செய்யும் ஒர் நாள்....

இருண்ட வானத்தினை ஆக்கரமித்து
ஓடிக்கொண்டிருக்கும் அந்த
கறுத்தமேகக்கூட்டத்திற்குள் தன் இருப்பினை வெளிப்படுத்த நிலவு போராடிக்கொண்டிருக்கும் ஓர்நாள்.....

சில வலிகளையும் துரோகங்களையும்
மாற்றங்களால் மறக்கடித்துவிடமுடியாதென்ற
உண்மைகள் உறுத்திக்கொண்டிருக்கும்
ஓர் நாள்....
நீண்ட மௌனங்களை அள்ளி பூசிக்கொண்டு எங்காவது
தொலைந்து போனால் என்னவென
தோன்றாமல் இல்லை ...

#இசைவிழிசந்திரன்.
© Isaivily chanthiran