...

4 views

முன் அந்தி சேயோன்
#DawningVerse.....
விகல்பம் விடியலில்
விடியல் முன் அந்தி மகன் குளிர் பார்வையில்
குறு குறுக்க குலுவிடும்
தாரகை கள் தயங்காது கேலி செய்திடும் குட்டி பொதிபோல் திரளும் திண்டாய் காற்றோடு வெண்முகில் வெள்ளோட்டம் விலகிச் செல்ல எண்ணி எத் தணிக்க ஏழ் பரி பூட்டி பொன்னொளி வீசும் பகலவனின் கூர் விழியில் மெல்ல மௌனம் சூடி விலகி கொண்டாள் கொண்மூ
மூரல் முகிழ்கிக்கும் முன்னவனின் கண்களுக்கு தப்பவில்லை தன்னவளின் நாணம் பொருத்திய பூ முகம்
© Ash(ஈசன் )