...

1 views

சிறைப்படாத சிந்தனைகள்....
கண்களால் கதைகள் ஆயிரம் பேசிவிடு
கருத்துகளை அதனூடே கச்சிதமாக ஓதிவிடு
காதோரம் கானமழை தேன்வழிய பாடிவிடு
காதலை முறையாக கலையாமல் தூது விடு

இதழோரம் அகம் குளிர நகை பூக்க விடு
இடையோரம் சருகாமல் ஆடை தளைய விடு
இமையோரம் கரு மையால் கீறிவிடு
இரவோடு சிதைக்காமல் கனவை வாழ விடு

தோள் தழுவும் தாவணியாய் மாறிவிடு
தோள் மீது சாய்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு கொடு
தோகை போல சிலிர்த்து விரிந்து ஆடிவிடு
தோற்காத மாறனுக்கு மீண்டும் வாழ்வு கொடு

விதைபோட்ட வயல் போல பார்வையிடு
விளையாட்டாய் விதி மீறின் வேறாகி விடு
விரலோடு வீணையைச் சுரம் தேடி தோய விடு
விசையிணை போல உறவோடு கலந்து விடு

ஒரு நாளை நினைவோடு நனைய விடு
ஓராண்டு கனவுகளை நிஜத்தோடு கோர்த்து விடு
ஒவ்வொரு மலராய் கூந்தலில் நீ சூடி விடு
ஒரு மழைக்காக விளைநிலம் போல ஏங்கி விடு

நான் மலைராணி மகளாக மாறவிடு
நாளை வான முகட்டோடு ஒரு கோலம் போட விடு
நனையாமல் கலையாமல் வானவில் ஆகிவிடு
நறுமணங்கொண்ட மல்லிகையை மேய விடு

© siriuspoetry