...

16 views

அன்பின் தருணம் ❤️
இன்று.....❤️😊📞

அன்பின் தருணம்....❤️

எதற்காவாவது
என்னைத் தேடி வரும்
அழைப்பில் கூட
எனக்கான அன்பை
எடுத்துக் கொள்பவள்
நான்....
அன்பிற்கு அனுமதி
தேவையில்லை
அனுபவிக்கவே அன்பு
அது ஒரு அழகான உணர்வு
என்பதால்....

அப்படியெனில்
எனக்கே எனக்காக
எல்லையற்ற
அன்பைக் கொண்டு
வந்த அழைப்பு
எத்தனை பேரழகு....

என்னை மட்டுமே மனம்
நிறைய மகிழ்வித்த அன்பு
நலம் விசாரித்த அன்பு
எத்தனை நிறைவானது....

என் சிறிய உலகில்
எனக்குக் கிடைக்கும்
இப்பேரன்பினால்
என் வெறும் நாட்கள் எல்லாம்
பெரும் பேரின்ப நாட்களாக மாறி மாறி
நாளை மற்றுமொரு நாளெனக்
கடக்காமல்
மகிழ்வின் நாளாக
மனம் நிறைய
நீங்காத நினைவைக்
கொடுத்துக் கடக்கிறது....
நானோ அவ்வன்பை
அணுவணுவாய்
ஆராதித்துக்கொண்டாடி
நிறைவாகிறேன்......🙏🏾😊❤️

அன்பே சிறந்தது தான்
அதனினும் அதீத சிறப்பானவர்கள்
அவ்வன்பை அள்ளிக் கொடுத்து
மகிழ்வித்து மகிழும் அன்பின் மனிதர்கள்....❤️

அந்தத் தருணம்....❤️✍🏾

): தமிழ்நிழல் ✍🏾

#அகரம்_தொடங்கி_அகிலம்_வரை #tamilnizhal #தமிழ் #தமிழ்நிழல் #தமிழ்க்கவிதைகள் #mythoughts