...

21 views

இரகசிய இரசிகை நான்
ஒவ்வொரு பொழுதிலும்
புரியாத புதிராகவே
புதியதாய் பூக்கிறான்

ஒவ்வொரு நாளும்
புதிதாய் புலப்படும்
அவன் எழுத்துகளில்

ஒவ்வொரு சீற்றத்திலும்
ஓரம் வந்த கடற் முத்துகளை
சேகரிக்கும் சிறு குழந்தையாக

ஒவ்வொரு தருணத்திலும்
என் மன கடலின் கரையில் சேர்ந்து
தத்தி நடக்கும் சிறு பிள்ளையாக

ஒவ்வொரு நாளும்
புதிதாய் படிக்க படிக்க அவனுக்குள்
மூழ்கி கொண்டிருக்கிறேன்

ஒவ்வொரு பக்கங்களிலும்
மூழ்கி மீள முடியாமல்
மீள வழி தெரியாமல்

ஒவ்வொரு நாளும்
மீள மனம் இல்லாமல்
மீண்டும் மீண்டும்

அவனிடமே சேரும்
அவன் எழுத்துகளின்
இரகசிய இரசிகை நான்..

© Shanmuga Priya M