...

6 views

தமிழ் தமிழ்தேனே......

உந்தன் சொற்றொடரில் வளையா நதியனைத்தும் வளையக்கண்டேன்......
நாவதினுள் தவழ்ந்து வெண்மதில் ஏறி இதழ் தாண்டி நீ குதிக்கக் கண்டு வேற்று மொழியெல்லாம் பதுங்க கண்டேன்.....
உன்னை வர்ணனை செய்ய வார்த்தைகளற்று நா இதழ் தாண்டி வெண்மதில் ஏறி ஒளியக் கண்டேன்....
உன்னில் நான் இழைத்த பிழைகள் கண்டு வெட்கமுற கண்டேன்....
என்னுள் நீ விதைத்த வித்துக்கள் அனைத்தும் முளையுற கண்டேன்.....
நீ தீராத ஊற்றைப்போல் ஊறக்கண்டு எந்தன் நாவிதழ் எச்சமதில் நனையக் கண்டேன்....
உன்னை நின்று சுவைக்க நேரமில்லை என்று சொல்வோர்க்கு நெஞ்சமதில் ஈரமில்லை....
சுவைத்தார்க்கோ நெஞ்சமதில் ஏக்கங்கள் தீரவில்லை...
நிற்காமல் சுழலுகின்ற கோள் மீது தமிழனாகிய நான் மட்டும்....
வந்த பாதையை
தொலைத்துவிட்டு....
போகும் பாதையை மறந்துவிட்டு....
நின்று எதையோ தேடுகிறேன் !
தொலைத்தது எதையென்று எனக்கும் தெரியவில்லை !
தூரமும் குறைகிறது.....
நேரமும் கழிகிறது.....
தொலைந்தவையும் இன்னும் என்னை வந்து சேரவில்லை !
நானும் சோர்வடையவில்லை....
இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன் !
நான் வந்த பாதைக்கான சுவடுகளையும்...
தேடுவதற்கான குறிக்கோளையும்....
போகும் பாதைக்கான சிகரத்தையும்....
நான் பார்த்த மூன்றெழுத்து கவிதைகளுள் தமிழும் ஒன்று.....
நான் கேட்ட முதல் தாலாட்டில் இன்றும் சொர்க்கமுண்டு.....


© lavanya lavanya