
3 views
பிதாமகன்கள்
மயானபூமியில்..
பொலிகின்ற அமைதியில்தான்..எம்
அன்றாட
வயிற்றுப்பாடும்
பசியாறும்..
வாழ்க்கை...
விடுகதையாய்
ஆனவரும்
நெடுங்கதையாய்த்
தொடர்ந்தவரும்..
சிறுகதையாய்
முடிந்தவரும்..
"போதுமிந்த மண்வாழ்வு..புதிரான பெருவாழ்வு" என
மனம்வெறுத்து
மாய்ந்தாலும்..எம்
மண்ணளிக்கும்
அவர்நாடும் மன அமைதி..!
நகரவாழ்வில் நிதம்
பணந்தின்னும்
பிணமாந்தர்..
பெருகியதால்....
மயான பிணங்களே
'எம்முயிர்' நண்பராயின..
எம் வாழ்விலும்..
கண்ணீருண்டு..
சோகம் களிநடம்
புரிவதுண்டு...
என்றாலும்..
இங்கெரியும்
உடல்களின்
வெம்மையில்தான்
எங்கள் கண்ணீர்
காய்ந்தே போனது...!
© SrinivasRaghu
பொலிகின்ற அமைதியில்தான்..எம்
அன்றாட
வயிற்றுப்பாடும்
பசியாறும்..
வாழ்க்கை...
விடுகதையாய்
ஆனவரும்
நெடுங்கதையாய்த்
தொடர்ந்தவரும்..
சிறுகதையாய்
முடிந்தவரும்..
"போதுமிந்த மண்வாழ்வு..புதிரான பெருவாழ்வு" என
மனம்வெறுத்து
மாய்ந்தாலும்..எம்
மண்ணளிக்கும்
அவர்நாடும் மன அமைதி..!
நகரவாழ்வில் நிதம்
பணந்தின்னும்
பிணமாந்தர்..
பெருகியதால்....
மயான பிணங்களே
'எம்முயிர்' நண்பராயின..
எம் வாழ்விலும்..
கண்ணீருண்டு..
சோகம் களிநடம்
புரிவதுண்டு...
என்றாலும்..
இங்கெரியும்
உடல்களின்
வெம்மையில்தான்
எங்கள் கண்ணீர்
காய்ந்தே போனது...!
© SrinivasRaghu
Related Stories
5 Likes
1
Comments
5 Likes
1
Comments