...

10 views

துறுதுறு மனிதர்😍
இன்று மீண்டும் திருப்பூர் மருத்துவர். செல்வம் காது, மூக்கு தொண்டை மருத்துவமனைக்கு சென்று வந்தேன்....
அவரது‌ மருத்துவமனையில் அவரது அறை‌ மூன்றாவது மாடியில் உள்ளது.......

மருத்துவர் வருவதற்கு தாமதம் என்றாலும் காத்திருப்பு கசக்கவில்லை ஆனால் குளிர் காரணமாக இயற்கை உபாதைகள் வரத்தானே செய்யும் அது இயல்பு என்றாலும் எல்லா இடங்களிலும் அதற்குரிய சரியான வசதி இருப்பதில்லை இங்கு மட்டுமல்ல எங்கு போயினும் இதே சிரமம் தான் பெண்களுக்கு..... அதுவும் எனக்கு எனும் போது இன்னும் அதீத சிரமம்....

பல தடைகளைத் தாண்டி ஓரிரு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டாலும் இதன் காரணமாக மட்டுமே எனது பல பயணங்கள் பல நல் வாய்ப்புகள் தடைப்பட்டு நிற்கும்......

இது என் பிரச்சனை மட்டுமல்ல!
இது ஒரு சமூகப் பிரச்சனை!
பேசப்பட வேண்டிய ஒன்று மறைபொருளாக்க இதில் எதுவுமில்லை......
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏன் விலங்கு பறவைகள் என ஒவ்வொரு உயிரினத்துக்கும் பொதுதானே
இயற்கை உபாதை
இதை உபாதை என்று கூறுவதை விட *இயற்கை அழைப்பு* எனலாம்...

சரி மருத்துவமனை‌ நிகழ்வுக்கு வருவோம்!!!!!

அவரது அறை மூன்றாவது மாடியில் என்று சொன்னேன் அல்லவா! அந்த மாடிப்படி ஏறுவதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே இல்லை எப்போதும்!

ஏனெனில்.....

அவருக்கு என் கணிப்பில் தோராயமாக 70 வயது இருக்கும் ஏனெனில் அவர் மருத்துவத்துறையில் 40 வருடமாக பணியாற்றி உள்ளதாக ஒரு பலகையைப் பார்த்தேன்...

அப்படியானால் மருத்துவப் பயிற்சி எல்லாம் முடித்து 30 வயதில் மருத்துவராகி இருக்கலாம் அப்படிப் பார்த்தால்
(30 + 40 = 70 )

ஆனால்.....

அவரைப் பார்த்தால் எழுபது வயதான நபர் போலவே தெரியாது ...... அவ்வளவு சுறுசுறுப்பு அவ்வளவு வேகம்..... அதுமட்டுமில்லாமல் அவரின் பேச்சு அத்துணை நகைச்சுவையாக இருக்கும்!
அவருக்கு அனுபவம் ஒரு பக்கம் இருந்தாலும்
மனிதர்களைக் கையாள்வதெல்லாம் ஒரு கலை !

என்னை ஒரு 3 நிமிடம் இல்லை 5 நிமிடம் பார்த்திருப்பார்
அதற்குள் அவரது சுறுசுறுப்பும் கலகலப்பும் என்னைத் தொற்றிக் கொண்டது என்றால் பாருங்களேன்!!!!!!
எனக்கே எழுந்து ஓட வேண்டும் என்று தோன்றியது
இத்தனைக்கும் காதுக்குள் எதை எதையோ வைத்து
ஆராய்ந்ததில் வலி ஒருபக்கம்
இன்னொரு பக்கம் இவரைக் குறித்தான ஆச்சரியம்
வயது ஒரு பொருட்டே அல்ல மனிதனுக்கு....
என்பதற்கு அவரே ஆகச் சிறந்த சான்று என்பேன் நான்......😊

இப்படி ஒரு மனிதரைப் பார்க்க மூன்று மாடியென்ன முந்நூறு கிலோ மீட்டர் கூடக் கடக்கலாம்!!!!

ஆனால் என்னை அழைத்துச் செல்பவர்களுக்கு தான்
சிரமம் அந்த மாடிப்படி ஒருவர் வரத்தான் அளவான வழி இருக்கும் இதில் எனக்கு கைத்தாங்கும் நபர் வருவது மிகச் சிரமம்
சிறப்பானவைகள் எல்லாம் சிரமத்தைக் கடந்துதானே கிடைக்கும்!!!!😍

காதுவலி ஒருபக்கம் என்றாலும் இப்படி ஒரு துறுதுறு மனிதரை சந்திக்கப் போகிறோம் என்பதில் அத்துணை மகிழ்வெனக்கு!!!!😊

குறிப்பு: ( * இயற்கை அழைப்பு என்ற சொல்லை எங்கள் பள்ளியில் Shyla mam அவர்களிடம் இருந்து அறிந்தேன்
அவர்கள் Nature call என்று சொல்லியதை இயற்கை அழைப்பு என மேலே பயன்படுத்தியுள்ளேன்..... Shyla mam க்கு நன்றியும் கூட ஆகச் சிறந்த ஆகப் பொருத்தமான தமிழ்ச்சொல் ஒன்றை அறிமுகப் படுத்தியதற்கு.....)



#அகரம்_தொடங்கி_அகிலம்_வரை #தமிழ்நிழல் #தமிழ்க்கவிதைகள் #mythoughts
தமிழ் நிழல்